Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டிரைக்.. சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மாநிலம் முழுவதும் 3வது நாளாக எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. சுமார் 4000க்கும் மேற்பட்ட எல்பிஜி கேஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ன. இதன் காரணமாக தமிழ்நாடு உள்பட தென்மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் நடந்து வந்தாலும், சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் தடையின்றி நடக்கும் என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய தென்மண்டல எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்ள டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான ஐஓசி, பிபிசி, எச்பிசி ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லும் பணிகளை மேற்கொள்கின்றன. ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 5,000 லாரிகள் இந்த பணிகளை மேற்கொள்கின்றன.

chennai gas cylinder

இந்த சூழலில் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும், எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையே அண்மையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தனர். இப்போராட்டம் 3வது நாளாக இன்றும் நடந்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் கோவையில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதுபற்றி லாரி உரிமையாளர்கள் கூறும் போது, எண்ணெய் நிறுவனங்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்க மறுக்கின்றன. எடை, தொலைவுக்கு ஏற்ப வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அபராத தொகை என்பது ஆரோக்கியமானதாக இருக்காது. இதனால் தொழிலை நடத்த முடியாது என்றார்கள். டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆனால் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் நடந்து வந்தாலும், சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகம் தடையின்றி நடக்கும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களின், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், "தென் மண்டல எல்.பி.ஜி., டிரான்ஸ்போர்ட்டர்களின் வேலை நிறுத்தம் நடந்து வரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்களிடம், போதுமான கேஸ் சிலிண்டர்கள் இருப்பு உள்ளன. எனவே, வினியோகம் தடையின்றி நடக்கிறது. வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, தொடர்ந்து பேச்சு நடக்கிறது.

புதிய ஒப்பந்தப்புள்ளி விதிகள், அரசு மற்றும் மத்திய கண்காணிப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேம்படுத்துவதற்காக, புதிய வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சில டிரான்ஸ்போர்ட்டர்கள் பாதுகாப்பு விதிகளுக்கான அபராதங்களை நீக்க கோரியுள்ளனர். எண்ணெய் நிறுவனங்கள், பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளன.

தற்போது வேலை நிறுத்தம் தொடர்ந்தாலும், சிலிண்டர் வினியோகம் தடையின்றி நடக்கும் என, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைய வேண்டாம்; வீடு மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர்கள் வினியோகம் வழக்கம் போல் நடக்கும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+