இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தந்த முக்கிய அசைன்மெண்ட்! பின்னணி என்ன?
சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவருமான இனிகோ இருதயராஜுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
திமுக அரசின் சாதனைகள் குறித்து இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. தயாரித்திருந்த வீடியோவை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கே இது ஆச்சரியமாக உள்ளது என ஆன் தி ஸ்பாட்டில் பாராட்டி தள்ளிவிட்டார்.
முதலமைச்சரின் பாராட்டை பெற்ற கையோடு அவர் தனக்கு கொடுத்திருக்கும் அசைன்மெண்டை செய்து முடிப்பதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டார் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம்
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து பங்கேற்று வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட முதல்வருக்கு, அங்கு ஒரு காணொலி திரையிடப்பட்டு காட்டப்பட்டது. அதில் திமுக அரசின் சாதனைகள், முதலமைச்சர் முன்னெடுத்த நடவடிக்கைகள் பற்றியெல்லாம் மிக விவரமாக எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

உற்சாகமடைந்த முதலமைச்சர்
இதனால் உற்சாகமடைந்த முதலமைச்சர் ஸ்டாலின், சில நிமிடங்களிலேயே இனிகோ இருதயராஜுக்கு முக்கிய அசைன்மெண்ட் ஒன்றை கொடுத்தார். அதுவும் எல்லோரது முன்னிலையிலும் மேடையிலேயே வைத்துக் கொடுத்தார். அதாவது, இந்த காணொலிக் காட்சியை இனிகோ இருதயராஜ் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் சென்று அதை மக்களிடத்தில் போட்டுக் காட்ட வேண்டும் என்பது தான் முதல்வர் போட்ட அன்புக்கட்டளை.

அரசின் திட்டங்கள்
இது தொடர்பாக முதல்வர் பேசியதாவது, ''இங்கே ஒரு காணொலிக் காட்சி வெளியிடப்பட்டது. நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உங்கள் அன்போடும், ஆதரவோடும் பொறுப்பேற்ற பிறகு, இந்த அரசின் மூலமாக என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறோம் என்பதை ஒரு காணொலிக் காட்சியாக நம்முடைய இனிகோவின் சீறிய முயற்சியோடு இது வெளியிடப்பட்டது.''

தமிழ்நாடு முழுவதும்
''எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பணிகள் செய்திருக்கிறோமா! இவ்வளவு சாதனைகள் நிறைவேற்றி இருக்கிறோமா! நானே அப்படியே கொஞ்சம் மெய்மறந்து போயிருந்தேன். அப்படி மெய்மறந்து இருக்கக்கூடிய நேரத்தில் நான் இனிகோ அவர்களை கேட்டுக்கொள்ள விரும்புவது இந்த காணொலிக் காட்சியை நீங்கள் தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் சென்று அதை மக்களிடத்தில் போட்டுக் காட்ட வேண்டும்.''
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications