சென்னை மக்களே.. நெட்வொர்க் பிரச்சனை வரலாம்.. அவசரத்துக்கு உதவும் UPI lite.. எப்படி பயன்படுத்துவது?
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழைநீர் சூழந்துள்ளது. நெட்வொர்க் பிரச்சனை இருக்கக்கூடும் என்பதால், கூகுள் பே, போன் பே பயன்படுத்தும் மக்கள், பின் லெஸ் யுபிஐ பேமெண்ட் வசதியை ஆக்டிவேட் செய்து கொள்வது அவசரத்திற்கு உதவும்.
இந்தியாவில் செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் க்யூ ஆர் கோட் அல்லது மொபைல் நம்பர் மூலம் பணம் செலுத்தி வருகிறோம். இதில் பணம் அனுப்பும்போது 4 அல்லது 6 இலக்க பின் நம்பரை அழுத்த வேண்டும். இந்நிலையில், சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் UPI LITE நடைமுறையில் உள்ளது.

UPI Lite பயனர்கள் ஒரு நாளில் இருமுறை ரூ. 2,000 என 4,000 வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ரூ. 200 வரை பணத்தை பின் நம்பர் இல்லாமல் அனுப்பிக் கொள்ள முடியும். யுபிஐ லைட் சேவை என்பது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்தாலும், ஒவ்வொரு முறை அனுப்பும்போதும் வங்கியில் இருந்து பணம் போகாது. உங்கள் வேலட்டில் இருந்துதான் செல்லும். எனவே, இணைய சேவையும் அவசியமில்லை.
இந்தச் சேவையில் பணம் செலுத்துவதற்கு எந்தவிதமான பின் நம்பரையும் உள்ளிட வேண்டிய அவசியமில்லை. UPI லைட்டின் நோக்கம் டிஜிட்டல் பணம் செலுத்துவதை எளிதாக்குவதே. தற்போது, இந்தியன் வங்கி, கனரா வங்கி, எஸ்பிஐ, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட 15 வங்கிகள் UPI லைட் வசதியை ஆதரிக்கின்றன.
சென்னையில் புயல் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நெட்வொர்க் இன்றி, அல்லது இணையம் பயன்படுத்தினால் சார்ஜ் வேகமாக தீரும் என்பதால், யுபிஐ லைட் சேவையை பயன்படுத்தலாம். நெட்வொர்க் இருக்கும்போது, உங்கள் வேலட்டில் பணத்தை மாற்றி வைத்துக்கொண்டால், அதன் பிறகு நெட்வொர்க் பிரச்சனை இருந்தாலும் கூட நீங்கள் பண பரிவர்த்தனை செய்ய முடியும்.
உங்கள் கூகுள் பே மூலம் யுபிஐ லைட் ஆக்டிவேட் செய்வது எப்படி?:
1. முதலில் Google Pay செயலியை ஓபன் செய்யவும்.
2. மொபைலின் திரையின் மேல் வலது மூலையில் உள்ள ப்ரொஃபைல் ஐகானை கிளிக் செய்யவும்.3. கீழே ஸ்க்ரோல் செய்து, 'UPI லைட்' அம்சத்தைத் தேடி அதை கிளிக் செய்யவும்.
4. அடுத்து UPI Lite பற்றிய வழிமுறைகள் மற்றும் விவரங்களுடன் புதிய திரை திறக்கும்.
5. இப்போது Activate UPI Lite என்பதை கிளிக் செய்யவும்.
6. உங்கள் வங்கிக் கணக்கை இணைத்து, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
7. செயல்முறை முடிந்ததும், உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.
8. அவ்வளவுதான். நீங்கள் வாலட்டில் இணைத்த பணத்தை, பின் நம்பர் போடாமல் பேமெண்ட் செய்யலாம்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications