இன்னும் 4 நாட்கள்தான் டைம்.. அதற்குள் வேலையை முடிங்க.. திமுக வேட்பாளர்களுக்கு போன.. முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளன. இந்த வேட்பாளர் பட்டியலில் உற்சாகமும் இருக்கிறது, அதிருப்தியும் இருக்கிறது.

இது ஒரு புறமிருக்க, வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியிருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ந்தேதி கடைசி நாள். இந்த நிலையில், திமுக, அதிமுக வேட்பாளர்கள், எப்போது வேட்பு மனு தாக்கல் செய்வது என தலைமையிடம் கேட்டு வருகின்றனர். வருகிற ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி (24-ந்தேதி) என்பதாலும், அதன்பிறகு தேய்பிறை ஆரம்பிப்பதாலும் 24-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

Important order to candidates on filing nominations for DMK in Lok Sabha elections 2024

அதனால், பெரும்பான்மையான வேட்பாளர்கள் 24-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனராம்.

வேட்பாளர் லிஸ்ட்: லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,

1‌ ) வடசென்னை - கலாநிதி வீராசாமி

2 ) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்

4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்

5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

6) வேலூர் - கதிர் ஆனந்த்

7 ) தருமபுரி - அ.மணி

8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

9 ) சேலம் - செல்வ கணபதி

10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்

11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா

12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி

13 ) கோவை - கணபதி ராஜ்குமார்

14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி

15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி

16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்

17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

18 ) பெரம்பலூர் - அருண் நேரு

19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்

20 ) ஈரோடு - பிரகாஷ்

21 ) ஆரணி - தரணி வேந்தன்

அதிமுக வேட்பாளர்கள்: அதிமுகவிற்கான லோக்சபா தேர்தல் கூட்டணி இன்று இறுதி செய்யப்பட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி

அதன்படி,
1‌ ) வட சென்னை - ஆர்.மனோ

2 ) தென் சென்னை - டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன்

3 ) காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர்

4 ) அரக்கோணம் - A.L.விஜயன்

5 ) கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்

6 ) ஆரணி - கஜேந்திரன்

7 ) விழுப்புரம் (தனி) - J.பாக்யராஜ்

8 ) சேலம் - P.விக்னேஷ்

10 ) ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்

11 ) கரூர் - தங்கவேல்

12 ) சிதம்பரம் (தனி) - M.சந்திரகாசன்

13 ) நாகை - சுர்ஜித் சங்கர்

14 ) மதுரை - டாக்டர் P. சரவணன்

15 ) தேனி - V.T.நாராயணசாமி

16 ) ராமநாதபுரம் - பா. ஜெயபெருமாள்

இது போக தேமுதிகவுக்கு லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+