ஸ்கோர் செய்த திமுக.. என்னங்க ஆச்சு? சட்டென சீறிய சீனியர்.. வெளியே வராத எடப்பாடி.. ஆடிப்போன அதிமுக!
சென்னை; தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் பெரிதாக கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் புகார்களை வைத்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வரும் 9ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய சாதகமான சூழல் உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த வாரம் முழுக்க இதனால் சென்னையில் கனமழை பெய்தது. சென்னையில் விடாமல் இரவு நேரங்களில் மழை பெய்தது.

வெள்ளம்
இந்த மழை காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. முக்கியமாக கத்திப்பாரா, வடசென்னையில் சில பகுதிகள், கேகே நகர் என்று சில இடங்களில் வெள்ளம் தேங்கியது. ஆனால் சென்னையில் வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது. மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்படவில்லை. எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படவில்லை.

எடப்பாடி சைலன்ட்
சென்னையில் ஒரு சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னைக்கு வரவே இல்லை. சென்னை பக்கம் அவர் எட்டிப்பார்க்கவே இல்லை. இதுவரை எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார். சென்னை நீரில் மூழ்கிவிட்டது என்று அவர் அறிக்கை வெளியிட்டார். ஆனால் அவர் நேரில் வந்து சென்னையில் பார்வையிடவில்லை. ஜெயக்குமார் உள்ளிட்ட சில சீனியர்கள் மட்டுமே சென்னையில் மக்களை பார்த்தனர். இதன் காரணமாக சென்னையை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்கோர் செய்த திமுக
சென்னை மழை வெள்ளத்தில் திமுக பெரிய அளவில் ஸ்கோர் செய்துவிட்டது. முக்கியமாக சென்னையில் எங்கும் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படவில்லை. வெள்ளம் ஏற்பட்ட இடங்களிலும் வேகமாக விடிந்துவிட்டது. அமைச்சர்கள் களமிறங்கி துரிதமாக செயல்பட்டனர். இதன் காரணமாக சென்னை மழையில் திமுக நல்ல மார்க் எடுத்துவிட்டது. இதுதான் அதிமுக தரப்பை அப்செட் ஆக்கி உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்றால், அந்த தலைவர் திமுகவை எதிர்க்க வேண்டும். திமுகவை தீவிரமாக எதிர்க்கும் தலைவருக்கு மட்டுமே ரத்தத்தின் ரத்தங்கள் ஆதரவு தெரிவிப்பார்கள்.

வீட்டை விட்டே வெளியே வரவில்லை
உதாரணமாக ஜெயலலிதா ஜானகி மோதலில், ஜானகி கொஞ்சம் திமுகவுடன் நெருக்கமாக இருந்தார். இதனால் தொண்டர்கள் தானாக ஜெயலலிதா பக்கம் சென்றனர். ஆனால் இப்போது எடப்பாடி - ஓபிஎஸ் இருவருமே திமுகவை தீவிரமாக எதிர்க்கவில்லை. எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி சென்னையில் இருக்க வேண்டும். ஆனால் அவர் சேலத்தில் வீட்டை விட்டே வெளியே வராமல் இருக்கிறார் என்று ரத்தத்தின் ரத்தங்கள் அப்செட் ஆகி இருக்கிறார்களாம்.

4 விஷயங்களில் அமைதி
முக்கியமாக அவர் ஏன் சேலத்தை விட்டு வர மறுக்கிறார் என்று சீனியர் மாஜி அமைச்சர் ஒருவரும் விசாரித்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் என்று மட்டும் இல்லை மற்ற சில விஷயங்களிலும் எடப்பாடி வலுவாக கருத்துக்களை வைக்க மறுத்துள்ளார். 1. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுக சாமி ஆணைய அறிக்கை பற்றி அவர் பேசவில்லை, 2. தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை பற்றி பேசவில்லை. 3. கோவை கார் வெடிப்பு பற்றி பெரிதாக பேசவில்லை. 4. குரு பூஜைக்கு ராமநாதபுரம் செல்லவில்லை என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் அவர் மீது அப்செட்டில் இருக்கிறார்களாம். எடப்பாடி ஏன் இப்படி சைலன்ட் மோடில் இருக்கிறார் என்று தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாம்!












Click it and Unblock the Notifications