Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எழும்பூர் ரயில் நிலையம்.. சென்னையின் அடையாளமாக இருந்த இடம்.. 2 நாளில் அடையாளமே மாறப்போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறன்றன. இந்நிலையில் பல வருடங்களாக அங்குள்ள 2 அடுக்கு மாடி கட்டிடங்கள் இன்னும் ஓரிரு நாட்களில் இடிக்கப்பட உள்ளது. புதிய தோற்றத்திற்கு எழும்பூர் ரயில் நிலையம் வரும் போது, தோற்றம் மட்டுமல்ல, அதன் மொத்த அடையாளமும் மாறிவிடும்.

வாம்மா துரையம்மா..இது வங்க கரையம்மா.. வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா என்று வெள்ளையர்களை 1900களில் வரவேற்ற சென்னை அப்போதே இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று. லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த நகரம். சென்னை மாநகராட்சியாகவே அப்போதும் இருந்தது.

Chennai train Egmore

இன்று வேண்டுமானால் வேளச்சேரியும், சோழிங்கநல்லூரும், திநகரும், தாம்பரமும் சென்னையின் அடையாளங்களை மாற்றி இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் வணிகத்திற்கும் சரி, சென்னை மக்களின் அடையாளத்திற்கும் சரி, பாரிஸ் கார்னரும், சென்ட்ரல் மற்றும் எழும்பூரும் தான் சாட்சியாக இருந்தன. சாட்சியாக நின்ற பாரிஸ் கார்னர், சென்ட்ரல், எழும்பூர் என இந்த மூன்றுமே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விட்டன.

எழும்பூர் ரயில் நிலையத்தை பொறுத்தவரை இந்தியாவில் முக்கிய மற்றும் நூற்றாண்டை கடந்த பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும். சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள எழும்பூர் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் கடந்த 1905-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி, 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் முடிந்தது. இந்த கட்டிடத்தை முதன்மை என்ஜினீயர் ஹென்றி இர்வின் வடிவமைத்திருந்தார்.

மதுரையும், திருநெல்வேலியும், நாகர்கோவிலும், திருச்சியும் இங்கு தான் ஒன்றாக கலக்கும் இடம். எத்தனை வட்டார வழக்குகளையும், வாழ்வாதாரம் தேடி வந்த மக்களையும் இந்த எழும்பூர் ரயில் நிலையம் ஒன்று சேர்த்துள்ளது தெரியுமா? வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்த பல பேரின் வாழ்க்கைக்கு முகவரியாக இருந்த இடம் தான் எழும்பூர். 116 ஆண்டுகளை கடந்தும் அற்புதமாக இருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 562 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரம் பயணிகள் இங்கிருந்து பயணிக்கிறார்கள்.

எழும்பூர் ரயில் நிலையம் 1116 ஆண்டுகள் கடந்தாலும் பழமை மாறாமல் அப்படியே இருந்து வந்தது. இந்நிலையில் மாறிவரும் காலத்திற்கு ஏற்ற வகையில், எழும்பூர் ரயில் நிலையம் மாறப்போகிறது. நவீன கட்டிடக்கலைக்கு மாறப்போகிறது. உலகத்தரத்தில் வசதிகளுடன் பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றப்பட்டு வருகிறது. தற்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டருக்கு ரயில் நிலையக் கட்டிடம் புதிதாக அமையவிருக்கிறது.

தற்போது ரயில் நிலைய பார்சல் அலுவலகமும் டிக்கெட் முன்பதிவு மையமும் இட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பல்வேறு கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த பணிகள் காரணமாக, முதல் கட்டமாக, ரயில் நிலையம் அருகே ஊழியர்கள், அதிகாரிகளின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, மரங்கள் அகற்றப்பட்டன.

தொடர்ந்து அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் நிலையத்தின் பின்புறம், டிக்கெட் கவுண்டர், ரயில் ஓட்டுனர் அறை, டிக்கெட் பரிசோதகர் அறை மற்றும் அலுவலக கட்டிடங்கள் இருந்த 2 அடுக்குகளை கொண்ட கட்டிடம் ஓரிரு நாளில் இடிக்கப்படுகிறது. இதற்காக பயணிகள் பாதுகாப்பு கருதி, இரும்பு தடுப்பு வேலிகள் மற்றும் வலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய பார்சல் அலுவலகம், பார்சல்களை கையாளுவதற்கான நடைமேம்பாலம், 72 மீட்டர் புறப்பாடு மையம், 36 மீட்டர் பாதை வழியாக பயணிகள் அமருமிடம், நடைமேம்பாலம், புதிய துணை மின் நிலையம், புதிய ரயில்வே குடியிருப்புகள் உள்பட பல்வேறு திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலையத்தில் இருப்பது போல பயணிகள் வருகை, புறப்பாடு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு நடைமேடை காத்திருப்பு அரங்கு வெளிப்புறப் பகுதி ஆகியவற்றுக்கு எளிதாகச் செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் பயணிகள் காத்திருப்புப் பகுதியிலிருந்து நடைமேடைகளுக்குச் செல்ல மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துப் பயணிகளும் பயன்படுத்தும் வகையில் கழிவறைகள் போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் அமைக்கப்பட இருக்கிறது. கார்கள், வாடகை கார்கள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றை நிறுத்தும் வகையில் அடுக்கு வாகன நிறுத்தங்கள் தனித்தனியாக அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் எழும்பூர் ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் பகுதி இடிக்கப்படாது என்றும் அனைத்து பணிகளும் 36 மாதங்களுக்குள் முடியும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+