வாரம் 5 நாள் மட்டுமே பணி.. வங்கி ஊழியர்களுக்கு டிசம்பரில் ஹேப்பி நியூஸ்! பணி நேரம் எப்படி இருக்கும்?
சென்னை: நம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த கோரிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்து இருக்கிறது. இந்நிலையில் தான் வங்கி பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாட்டில் உள்ள வங்கிகளுக்கு அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினமாகும். சனிக்கிழமை என்றால் மாதத்தின் முதல் மற்றும் சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும். 2வது, 4வது வார சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தான் தற்போது பொதுமக்கள் அடிக்கடி வங்கிகளுக்கு செல்வது இல்லை. ஆன்லைன் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் ஐடி நிறுவனங்களை போல் தங்களுக்கும் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்க வேண்டும். அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வங்கி ஊழியர்களிடம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.
இதுதொடர்பாக ஐபிஏ என அழைக்கப்படும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மற்றும் வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் இடையே கடந்த ஆண்டு டிசம்பரில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் என்பது தான் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சாரம்சமாகும். அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணியாளர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பினர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
வயநாடு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டி? பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக வியூகம்! பரபர தகவல்
இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் 8 ம்தேதி ஐபிஏ மற்றும் அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் 5 நாள் வார விடுமுறைக்கு ஏற்ப திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அதன்படி வங்கி ஊழியர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழகைளில் விடுமுறை பெற வேண்டும் என்றால் தினமும் கூடுதலாக 40 நிமிடங்கள் பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த 5 நாள் பணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்ககு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு சார்பில் இன்னும் அனுமதி என்பது வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் தான் மத்திய அரசு சார்பில் டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் ஹேப்பியாகி உள்ளனர். இந்த ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் நாட்டில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பொதுத்துறை வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்.
உட்கார்ந்ததால் வழக்கு.. ஜெயலலிதா விளம்பர செலவை கேட்ட ஆர்டிஐ ஆர்வலர் 10 ஆண்டுக்கு பின் விடுதலை
இந்த 5 நாள் பணி முறை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வங்கி செயல்படும் நேரம் என்பது மாற்றியமைக்கப்பட உள்ளது. அதாவது பொதுவாக நம் நாட்டில் வங்கிகள் காலை 9.30 மணி முதல் மதியம் 5.30 மணி வரை செயல்படும். 5 நாள் விடுமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் தினமும் காலை 9.30 மணிக்கு பதில் காலை 9 மணிக்கு வங்கிகள் செயல்பட தொடங்கும். மாலை 5.30 மணிக்கு பதில் 5.40 மணி வரை வங்கிகள் செயல்படும். இருப்பினும் மக்களுக்கான சேவை என்பது காலை 10 மணி முதல் 4 மணி வரை மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications