உட்கார்ந்ததால் வழக்கு.. ஜெயலலிதா விளம்பர செலவை கேட்ட ஆர்டிஐ ஆர்வலர் 10 ஆண்டுக்கு பின் விடுதலை
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விளம்பரத்துக்காக எவ்வளவு செலவு செய்தார்? என்பது பற்றி தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் ஆர்டிஐ ஆர்வலர் சிவ இளங்கோ கேள்வி கேட்டார். இதற்கு பதில் வராத நிலையில் தகவல் ஆணைய விசாரணையின்போது எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்ததால் கடந்த 2015ல் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சிவ இளங்கோ நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளின் நிதி செலவினங்கள் உள்பட பல்வேறு செயல்பாடுகளை பொதுமக்கள் ஆர்டிஐ எனும் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் கேள்விகள் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

குறிப்பாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது? அந்த நிதி எப்படியெல்லாம் செலவழிக்கப்படுகிறது? என்பது பற்றி பலரும் கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இப்படியான ஆர்டிஐ ஆர்வலர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவே ஒவ்வொரு மாநிலம் சார்பில் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு சார்பில் மத்திய தகவல் ஆணையம் என்பது செயல்பட்டு வருகிறது. ஆர்டிஐ அலுவலர்கள் தங்களின் கேள்விகளை முறைப்படி கேட்டால் மத்திய, மாநில தகவல் ஆணையம் சார்பில் குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் என்பது அளிக்கப்படும்.
‛நண்பன் பட பந்தம்’.. விஜயின் தவெக மாநாட்டில் பங்கேற்கும் பிரபலம்? கவனம் பெறும் நடிகர் ஜீவா!
இந்நிலையில் ஊழல்களுக்கு எதிராக செயல்படும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் சிவ இளங்கோ என்பவர் கடந்த 2012ல் ஆர்டிஐயில் ஒரு கேள்வி கேட்டு இருந்தார். அதாவது ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் நிலையில் அதிமுக அரசு சார்பில் நாளிதழ்களில் விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது? என்று கேள்வி கேட்டு அதற்கான பதிலை வழங்கும்படி கூறியிருந்தார்.
அதாவது 2012 என்பது 2014 நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் நெருங்கிய காலமாக இருந்தது. பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டார். இந்த சமயத்தில் ஜெயலலிதா தன்பக்கம் கவனம் ஈர்க்கும் வகையில் நாளிதழ்களில் முழுபக்க விளம்பரங்களை கொடுத்து வந்தார். இதனால் தான் சிவ இளங்கோ அந்த கேள்வியை கேட்டார். அவரது கேள்விக்கு அரசு சார்பில் பதில் என்பது அளிக்கப்படவில்லை. இதையடுத்து சிவ இளங்கோ மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீடு மீது கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி தகவல் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை தகவல் ஆணயைர் கேஎஸ் ஸ்ரீபாதி மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதி எஸ்எஃப் அக்பர் ஆகியோர் விசாரித்தனர். இந்த விசாரணையின்போது சிவ இளங்கோ அமர்ந்து இருந்தார். அப்போது கேஎஸ் ஸ்ரீபாதி மற்றும் எஸ்எஃப் அக்பர் உள்ளிட்டவர்கள் அவரை எழுந்து நிற்கும்படி கூறினர். அதற்கு சிவ இளங்கோ மறுப்பு தெரிவித்தார். தகவல் ஆணையர் முன்பு எழுந்து நின்று தான் பதில் சொல்ல வேண்டும் என்று எங்கு கூறவில்லை என்று தெரிவித்தார்.
வயநாடு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டி? பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக வியூகம்! பரபர தகவல்
இதையடுத்து அன்றயை தினம் எந்த விசாரணையும் நடக்கவில்லை. அதோடு அவரது மேல்முறையீடு மனுவும் விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை கண்டித்து சிவ இளங்கோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் குற்றம் செய்ய தூண்டுதல் உள்பட பல பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி சிவ இளங்கோவும் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் 3 நாள் அடைக்கப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இருப்பினும் அவர் மீதான வழக்கு என்பது சென்னை சைதாப்பேட்டை 138 வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சிவ இளங்கோ தனக்கு என்று வழக்கறிஞர் யாரையும் வைக்கவில்லை. அவரே தொடர்ந்து வாதாடி தன்தரப்பு வாதங்களை முன்வைத்தார். அதேபோல் ஸ்ரீபாதியும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மொத்தம் 138 முறை விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு சிவ இளங்கோ ஆஜரானார். இந்த வழக்கில் கடந்த 15ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது சிவ இளங்கோ மீது எந்த தவறும் இல்லை எனக்கூறிய நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications