நீங்களே கூட நாளைக்கு போராட்டம் நடத்தலாம்! உங்க பேட்டியை பார்த்தேன்! வானதியை கலாய்த்த கே.என்.நேரு!
சென்னை: கோயம்புத்தூரில் சாலை சரியில்லாமல் இருப்பதாக நீங்க பேட்டி கொடுத்ததை நானும் பார்த்தேன் என சட்டசபையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு பதிலளித்து பேசும் போது அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
மேலும், கால்வாய் ஆக்கிரமிப்பு எனக் கூறும் நீங்கள், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றினால் போராட்டம் நடத்தினாலும் நடத்துவீர்கள் என கலாய்த்தார்.
பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசும் போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டசபைக் கூட்டம்
தமிழக சட்டசபையின் 5ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கால்வாய் ஒன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் முறையாக தூர்வார முடியாத நிலை இருப்பதாகவும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிசாவன் தெரிவித்தார். மேலும், கேள்வி நேரத்தின் போது இது தொடர்பாக கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசனுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

கலாய்த்த நேரு
அப்போது கோவையில் சாலை சரியில்லாமல் இருப்பதாக நீங்க பேட்டி கொடுத்ததை நானும் பார்த்தேன் என வானதியிடம் கூறிய அமைச்சர் நேரு, கோவையில் சாலைகளை செப்பனிடுவதற்காக ரூ.72கோடி விடுவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட தகவலை பேரவையில் தெரிவித்தார். மேலும், கால்வாய் ஆக்கிரமிப்பு எனக் கூறுகிறீர்கள் நாளைக்கே அவர்களை காலி செய்ய வைத்தால் நீங்களே போராட்டம் நடத்தினாலும் நடத்துவீர்கள் என கலாய்த்தார்.

எல்லா நகரங்களிலும்
கோவையில் மட்டுமல்ல எல்லா பெரிய நகரங்களிலும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பிரச்சனைகள் இருக்கிறது என்றும் கோவையில் புதிய சாலைகள் அமைக்க ரூ.200 கோடி விரைவில் விடுவிக்கப்பட இருக்கிறது எனவும் கூறினார். இதனிடையே வானதி சீனிவாசன் பேரவையில் முன்வைத்த கோரிக்கை குறித்து ஆணையரிடம் கலந்து பேசி விரைவில் தீர்வு வழங்கப்படும் என்ற உறுதியை அமைச்சர் கே.என்.நேரு அளித்தார்.

நேரடியாக கேள்வி
திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை சட்டசபையில் பேச எழுந்தவுடன் தங்கள் கட்சியின் தலைமையை புகழாமால் கேள்விக்கு செல்ல மாட்டார்கள். இதனிடையே பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் யாரையும் புகழாமல் நேரடியாக கேள்விக்கு வந்ததால் சபாநாயகர் அவர் பேசும் போது எந்த குறுக்கீடும் செய்யவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications