ஜாதி ரீதியாக மாயாவிற்கு கமல் ஆதரவு தருகிறார்.. பாய்ந்து வந்த புகார்! இத்தனை நாள் சலுகை இதற்குத்தானா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை மாயாவிற்கு நடிகர் கமல்ஹாசன் ஜாதி ரீதியிலான ஆதரவு கொடுப்பதாக நெட்டிசன்கள் புகார் வைத்து வருகின்றனர்.
தமிழில் மனிதன் என்ற படம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி இருந்தது. அதில் ஒரு காட்சியில் வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ்.. நீதிபதியாக இருப்பவரிடம்.. ஆஜர் ஆகும் நேரத்தில் கோர்ட் கேஸை தாண்டி பர்சனல் விஷயங்களை பேசுவார். நீதிபதியே வக்கீலிடம் உதவி கேட்பது போல கூட காட்சிகள் இருக்கும்.

தானும் நீதிபதியும் எவ்வளவு நெருக்கம் என்பதை காட்டும் வகையில் அந்த காட்சியில் பிரகாஷ் ராஜ் நடித்து இருப்பார். தனக்கு நீதிபதியிடம் ஒரு privilege இருக்கிறது என்பதை காட்டிக்கொள்வதற்காக அவரின் அந்த பேச்சு அமைந்து இருக்கும்,
அதே.. privilege உடன்தான் மாயாவும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் நடித்தவர் என்பதற்காக மாயாவிற்கு சலுகைகள் கொடுக்கப்படுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

புகார்கள்: அதிலும் கடந்த வாரம்.. என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்ற போது பலரும் கமலுடன் நடிக்க வேண்டும், அவரை இயக்க வேண்டும் என்று கூறிய போது கூட மாயா ஒருபடி மேலே சென்று தனது privilegeயை காட்டிக்கொள்ளும் படியாக.. நான் லோகேஷ் கனகராஜிடம் ஏற்கனவே ஸ்கிரிப் ஒன்றை கொடுத்துவிட்டேன் என்று கூறுவார். அதாவது கமல் - லோகேஷ் நெருக்கம்.. அதேபோல் நானும் லோகேசுக்கு நெருக்கம் என்பதை காட்டிக்கொள்ளும் விதமாக.. தனது privilegeஐ காட்டும் விதமாக அவர் பேசியதாக புகார்கள் வைக்கப்பட்டன.
இப்படிப்பட்ட நிலையில்தான் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை மாயாவிற்கு நடிகர் கமல்ஹாசன் ஜாதி ரீதியிலான ஆதரவு கொடுப்பதாக நெட்டிசன்கள் புகார் வைத்து வருகின்றனர். அதாவது இருவரும் ஒரே ஜாதி பின்புலம் கொண்டவர்கள் என்பதால்.. இங்கே privilegeஐ காட்டுகின்றனர்.. பாகுபாடு இருக்கிறது என்று நெட்டிசன்கள் புகார்கள் வைக்க தொடங்கி உள்ளனர்.

முக்கியமாக ஒரு முறை நிக்சனின் ஏரியா பற்றி தினேஷ் பேசியதற்கு திட்டிய கமல்ஹாசன்.. ஒரு நாள் முழுக்க மாயா ஒரு குறிப்பிட்ட ஜாதி ஸ்டைலில் பேசியதை கேள்வி கேட்கவில்லை. டீச்சர் ரோல் என்றதும் அந்த குறிப்பிட்ட ஜாதி ஸ்லாங்கை தேர்வு செய்தது ஏன் மற்ற ஜாதியில் டீச்சர்களே இல்லையா என்ற கேள்வியை எழுப்பவில்லை. அதேபோல் முதல் பெஞ்ச் ஸ்டூண்ட் என்பதற்காக விசித்திராவும் ஒரு குறிப்பிட்ட ஜாதி ஸ்லாங்கில் பேசினார்.
வேறு ஜாதி மாணவர்கள் முதல் பெஞ்சிலேயே இருக்க மாட்டார்களா என்ற கேள்வியையும் கமல் கேட்கவில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். இதுவரை மாயா பல முறை தவறு செய்தும், மோசமாக நடந்தும், என்ன செய்தாலும் கமல் காப்பாற்றுவார் என்ற நினைப்பில் இருந்தும் கூட கமல் இதை பற்றி எல்லாம் கேள்வி கேட்கவே இல்லை.
பக்கத்தில் இருக்கும் பூர்ணிமாவை திட்டும் கமல்.. மாயாவை திட்டுவதே இல்லை. இதனால் கமல்ஹாசன் ஜாதி ரீதியிலான ஆதரவு கொடுப்பதாக நெட்டிசன்கள் புகார் வைத்து வருகின்றனர்.
வெளியேறுகிறார்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் கமல் தொகுத்து வழங்கும் விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கமல் ஹாசன் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறார். அவர் எடுக்கும் முடிவுகள் சரியில்லை.

அவர் பிரதீப்பை விசாரிக்காமல் அனுப்பிவிட்டார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என்று விமர்சனம் செய்யப்பட்டது. தற்போது அவர் மாயாவை தீவிரமாக ஆதரிப்பதும், மாயாவிடம் மட்டும் நட்பாக பேசுவதும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அர்ச்சனாவை விமர்சனம் செய்வது என்று அவர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதும் கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அவரின் இந்த செயல்.. அரசியலுக்கு வந்து பதவிகள் கிடைத்தாலும் அவர் இப்படித்தானே தவறாக முடிவுகளை எடுப்பார் என்று விமர்சனமாக மாறி உள்ளதாம். இதனால் கமல் ஹாசனிடம் அவருக்கு நெருக்கமானவர்கள்.. அரசியல் வாழ்க்கையே உங்களுக்கு போயிடும். வேண்டாம். இனி பிக் பாஸ் மூலம் பெயரை கெடுக்க வேண்டாம்.
வெளியே வந்து விடுங்கள் என்று ஆலோசனை வழங்கி இருக்கிறார்களாம். இதனால் கமல் ஹாசன் 2024 லோக்சபா தேர்தலில் கவனம் செலுத்தும் விதமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications