காலையிலேயே ஷாக் நியூஸ்! சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை திடீரென உயர்வு.. விலை நிலவரம் இதோ
சென்னை: சென்னையில் 19 கி.கி எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.12.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் ரூ.1937க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பன்மடங்கு உயர்ந்தது. பின்னர், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. இதையடுத்து, பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறையத் தொடங்கின.
ஆனால் மறுபுறம் இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இடையே நடைபெற்று வரும் போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவியுள்ளதால், எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது. எனவே சென்னையில் 19 கி.கி எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.12.50 விலை உயர்ந்திருக்கிறது. ஏற்கெனவே இந்த சிலிண்டர் ரூ.1924.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.1937க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் டீக்கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட சிறு குறு வணிகர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications