விடாத விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு.. சென்னை ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஜூன் 14ம் தேதியான இன்று பெட்ரோல் லிட்டருக்கு 97.69 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.92 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன.

In Chennai, the price of a liter of petrol has crossed Rs 97.69

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.43 ரூபாய், டீசல் லிட்டர் 91.64 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ 97.69 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ 91.92 ஆகவும் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வால் இரு சக்கர வாகனங்கள், சொந்தமாக கார் வைத்திருப்போர் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவீனம் ஆகிறது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் இருப்பதை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து நாடு முழுக்க காங்கிரஸ் கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய நிலையிலும், விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+