15 ஆண்டு காத்திருப்பு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை மார்ச்சில் தொடக்கம்.. சென்னைக்கு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. 15 ஆண்டுகளில் பல்வேறு சவால்களை தாண்டி சென்னை வேளச்சேரி - பரங்கிமலை ரயில் திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரயில் அடுத்த ஆண்டு மார்ச் முதல் இயங்க உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பொதுமக்கள் விரைவாக ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல வசதியாக பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

chennai velachery parangimalai train

குறிப்பாக வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்டம் கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இந்த பணியை முடிப்பது எளிதாக அமையவில்லை. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையால், பல ஆண்டுகளாக பணி கிடப்பில் போடப்பட்டது.

அதன்பிறகு கடும் சவால்களுக்கு நடுவே நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. இதையடுத்து 2022ம் ஆண்டு முதல் பணிகள் தொடங்கியது. வேளச்சேரி - பரங்கிமலை 5 கி.மீ., துாரம் இணைக்கும் வகையில் மேம்பால ரயில் பாதை திட்டப்பணி தொடங்கியது. பெரிய தூண்கள் அமைக்கப்பட்டது.

அதன்பிறகு பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அதன்பிறகு சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்தனர். தூண்களின் உறுதித்தன்மையை ஆராய்ந்த பிறகு மீண்டும் பணி தொடங்கியது. இப்படி பல்வேறு சவால்களை தாண்டி கடந்த 2008 ம் ஆண்டு தொடங்கிய இந்த பணி 15 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் பணியில், மேம்பாலம் இணைப்பு பணி முடிந்துள்ளது. இதையடுத்து ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கி வேகமாக நடந்து வருகிறது.

தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வேளச்சேரி - பரங்கிமலை இடையே ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சென்னை மக்களுக்கு நல்ல செய்தியாக பார்க்கப்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+