கை ரேகை இல்லைன்னா சிலிண்டர் கிடைக்காதா? எல்பிஜி கேஸ் வாங்க போறீங்களா? இதை படிங்க!
சென்னை: ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில மாதங்களாக LPG சிலிண்டர் நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் நுகர்வோரின் வீட்டு வாசலில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, 70%-80% டெலிவரி பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் அங்கீகார சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் நேரடியாக வீடுகளில் வந்து சிலிண்டர் வழங்கும் போதே நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் சோதனை செய்யப்படுகிறது.
மேலும், எல்பிஜி சிலிண்டர்களை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் போது டெலிவரி செய்பவர்கள் உங்கள் பயோமெட்ரிக்கை சோதனை செய்து ஆதார் விவரங்கள் உங்களுடையதா என்பதை சோதனை செய்வார்கள்
மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஒத்துழைத்து தங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் சிலிண்டர் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.
சென்னை கட்டுப்பாடு இல்லை: இந்த நிலையில்தான் ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி மானியத்துடன் கூடிய எல்பிஜியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை அங்கீகரிப்பதற்காக மட்டுமே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால் கை ரேகை கொடுக்க இணைப்பு எடுத்த ஆட்கள் எப்போதும் வீட்டில் இருக்க வாய்ப்பு இல்லை. அதனால் அவர்கள் கைரேகை கொடுக்க முடியாமல் போகலாம். இதன் காரணமாக மானியம் துண்டாகும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால் ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கைரேகை எப்போதும் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் அது கட்டாயம் இல்லை. கைரேகை கொடுத்தால் மட்டுமே சிலிண்டர் கிடைக்கும் என்பது தவறு என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பொதுவாக சர்வர் செயலிழப்பு போன்ற தொழில்நுட்ப கோளாறுகளால் ஆதார் அங்கீகார செயல்முறை அடிக்கடி சிக்கலுக்கு உள்ளாகும். இந்த அங்கீகார செயல்முறையை அவர்கள் முடிக்கவில்லை என்றால், அது எரிவாயு இணைப்பு துண்டிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று மக்கள் அடிக்கடி பீதியடைந்துள்ளனர். இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளன.
இதனால் கட்டணம் உயராது. அதே சமயம் அபராதம் விதிக்கப்படாது. மேலும் மானியமும் தடை படாது. எனவே ஆதார் சரிபார்ப்பிற்காக கை ரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் OMC அதிகாரிகள் அத்தகைய அச்சத்திற்கு எந்த தேவையில் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். அதன்படி இந்த பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு இதுவரை குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை. ஆனால், தேவைப்படும் நேரங்களில் அதை முடிக்க வேண்டும். எனவே, முதல் கவனம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளிகள் மீது உள்ளது. இதற்குப் பிறகு, மற்ற மானியதாரர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் என்று எல்பிஜி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த மாதம் ரூ.1,695க்கு விற்ற சிலிண்டர், ரூ. 1,898-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி, ரூ. 918க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications