சென்னை மக்களே உஷார்! பால் பாக்கெட்டுகளை திருடி‛ஜுட்சு’ செய்த இளைஞர்! யார் இந்த அனிமே ரசிகர்? வீடியோ
சென்னை: சென்னையில் உள்ள வீட்டில் இருந்த பால் பாக்கெட்டுகளை பைக்கில் வந்து திருடிய இளைஞர் அனிமே கதாபாத்திரமான 2K கிட்ஸின் மனம்கவர்ந்த நருடோவில் வருவது போல் ஜுட்சு செய்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள வீடுகளின் கதவுகளில் பார்த்தால் ஒரு பை தொங்கும். அடுக்குமாடி குடியிருப்பு என்றால் பால்கனி அல்லது ஜன்னலில் இருந்து கீழ்நோக்கி கயிறு ஒன்றில் பை அல்லது கூடை தொங்கும்.

அந்த ஏரியாவில் பால் விற்பனை செய்வோர் இந்த பை அல்லது கூடையில் பால் பாக்கெட்டுகளை வைத்து விட்டு செல்வார்கள். இதன்மூலம் பால் வாங்க வீட்டில் இருப்பவர் வெளியே வர வேண்டாம். அதேபோல் பால் வியாபாரியும் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டாம்.
இந்த முறையில் இது சாதகமாக இருந்தாலும் கூட பாதகமான விஷயமும் ஒன்று உள்ளது. அதாவது வியாபாரி வைத்துவிட்டு செல்லும் பால் பாக்கெட்டுகள் சில சமயம் திருடு போவதும் உண்டும். அந்த வகையில் தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது அதிகாரலை நேரத்தில் வீட்டு கதவில் பை ஒன்று தொங்குகிறது. அதில் பால் பாக்கெட்டுகள் இருக்கின்றன. இந்த வேளையில் பைக்கில் ஹெல்மெட், பேண்ட் டீசர்ட் அணிந்து இளைஞர் ஒருவர் வருகிறார். அவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு சுற்றிலும் பார்த்துவிட்டு வேகமாக இறங்கி செல்கிறார்.
அதன்பிறகு கேட்டில் தொங்கும் பையில் கிடந்த பால் பாக்கெட்டுகளை எடுத்து தனது பேக்கில் வைத்து கொண்டு பைக்கில் அங்கிருந்து புறப்படுகிறார். முன்னதாக அவர் பால்பாக்கெட்டுகளை எடுத்துவிட்டு பைக்கில் ஏறும் போது இருகைகளையும் இணைத்து ஜப்பானில் பிரபலமான ஜுட்சு (Jutsu) செய்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
இந்நிலையில் தான் அந்த இளைஞர் பால்பாக்கெட்டை திருடும் காட்சி அங்குள்ள சிசிடிவி காட்சியில் நன்கு பதிவாகி உள்ளது. அந்த காட்சி தற்போது வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் இளைஞர் நருடோ (Naruto) ரசிகராக இருப்பார் போல் என தெரிவிக்கின்றனர். அது என்ன நருடோ ரசிகர் என கேட்கிறீர்களா?.
அதாவது நருடோ என்பது ஒரு அனிமே (அனிமேஷன்) தொடராகும். ஒரு காலத்தில் ஜப்பானில் மட்டும் அனிமேஷன் தொடர்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. அதன்பிறகு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் இந்த அனிமே தொடர்கள் பரவின. இது 2K கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்து. இதற்கு முக்கிய காரணம் என்றால் கிட்ஸ்களை கவரும் வகையில் அனிமேஷன் காட்சிகளும், உடல் அசைவுகளோடு கூடிய காந்த குரல் மொழியும் தான் முக்கிய காரணமாகும்.
இந்தியாவில் போகேமான், ஜாக்கிஜான் உள்ளிட்ட அனிமே தொடர்கள் 2K கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலம். அப்படியாக அனிமே தொடர் ஒன்று தான் நருடோ. இந்த தொடரில் உள்ள கதாபாத்திரங்கள் இரு கைகளை இணைத்து ஜுட்சு என்பதை செய்யும். ஜுட்சு என்பது ஜப்பான் மொழியின் சிறப்பு திறன்களை குறிக்கும். தற்போது சென்னையில் பால் பாக்கெட்டுகளை திருடிய இளைஞரும் நருடோ தொடரில் வருவது போல் ஜுட்சு செய்துவிட்டு சென்றார். இதனால் தான் இந்த திருட்டில் ஈடுபட்டவர் நருடோவின் தீவிர ரசிகராக இருப்பாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை முகப்பேர் கிழக்கு கோல்டன் ஜார்ஜ் நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளை அடையாளம் தெரியாத மர்ம நபர் TN 10 W 6521 எனும் பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவு 1/5 @chennaipolice_ pic.twitter.com/kBd89I3jTK
— சு.ஆ.பொன்னுசாமி (@PONNUSAMYMILK) July 1, 2023
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications