வீட்டுக்குச் சென்று பிரசவம்! செவிலியருக்கு 1 சவரன் தங்கம்! காலத்தால் அழியாத கருணாநிதி சாதனைகள்!
சென்னை: தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு இன்று வலுவாக உள்ளதென்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் கருணாநிதி என்பது, அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கதாகும்.
மகத்தான மருத்துவத்துறைக்கு கருணாநிதி என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை தமிழக அரசு ஒரு பெரிய குறிப்பாகவே விவரித்துள்ளது. அதன் விவரம் வருமாறு;

''சிசு மரணம் ஏற்படுவதற்கான மிக முக்கியமான காரணம் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் வழக்கம்தான். இதற்கு எதிரான பிரச்சாரங்கள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டது என்றாலும், வீட்டுக்கே சென்று பிரசவம் பார்க்கும் முடிவை அரசு எடுத்தது. இதற்காக, வீட்டுக்குச் சென்று பிரசவம் பார்க்கும் செவிலியருக்கு ஊக்கத்தொகை அறிவித்தார் கலைஞர்.''
''அதாவது, ஒவ்வொரு பிரசவத்துக்கும் ஊக்கத்தொகை உண்டு. இதோடு, சிசு மரணம் ஏதும் ஏற்படாமல் சிறப்பாகக் கையாளும் செவிலியருக்கு ஒரு சவரன் தங்கம் பரிசு என்றும் அறிவித்தார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை சிறப்பாகச் செயல்பட்ட அனைவருக்கும் சுழல் கேடயம் வழங்கி ஊக்கப்படுத்தினார் கலைஞர்.''
''பிறகு, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் வழியாக, பெண்கள் ஊட்டச்சத்துமிக்க உணவு எடுத்துக்கொள்ளவும் உடல்நலனை மேம்படுத்திக்கொள்ளவும் நிதியுதவி அளித்தார். பெண்களும் குழந்தைகளும் இதனால் பயன்பெற்றனர்.''
''குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்குவது, கர்ப்பிணிப் பெண்களுக்கு முதன்மை சுகாதார உதவிகளைச் செய்வது, இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்குவது, கருவுற்ற தாய்மார்களைப் பதிவுசெய்து அவர்களைத் தொடர்ந்து கவனித்துக்கொள்வது, பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்குவது, தாய்-சேய் நல அட்டைகள் வழங்குவது, பிரசவம் பார்ப்பது, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வது, பிறப்பையும் இறப்பையும் உடனடியாகப் பதிவுசெய்வது, அரசின் பல்வேறு திட்டங்களையும் மக்களிடம் கொண்டுசேர்ப்பது என ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி மிகப் பெரியது. ''
''கலைஞர் முதன்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது இருந்த ஆரம்ப சுகாதாரங்களின் எண்ணிக்கை வெறும் 300 மட்டுமே. அதை ஆயிரக்கணக்கில் உயர்த்தினார் கலைஞர். இங்கெல்லாம் 24 மணிநேரமும் மருத்துவ உதவி கிடைக்கும்படி செய்தார்.''
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications