தமிழகத்தின் பல நகரங்களிலும் கடும் பனி மூட்டம்.. வாகன ஓட்டிகள் அவதி
பெரும்பாலான நகரங்களில் பனிப்பொழிவு நிலவுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் பல நகரங்களிலும் கடும் பனிப்பொழிவு காரணமாக பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானார்கள்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகம் இருக்கிறது. இரவிலேயே பனிப்பொழிவு ஆரம்பித்து விடுகிறது. நள்ளிரவுக்கு மேல் அதிகமாகி விடுகிறது. அதிகாலையில் எதிரில் யார் இருப்பது என்று கூட தெரியாத அளவுக்கு உள்ளது.

சென்னையில் கடந்த 2, 3 நாட்களாக அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இன்று காலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சரிவர தெரியவில்லை. இதனால் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துக்கு உள்ளானார்கள்.
அதேபோல சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் பல இடங்களில் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமப்பட நேரிட்டது.












Click it and Unblock the Notifications