தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு டபுள் டிஜிட்.. அதிமுகவோடு விவாதத்திற்கு ரெடி.. அண்ணாமலை பரபர
சென்னை: தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு இரட்டை இலக்கத்தில் வெற்றி கிடைக்கும் என்றும், இந்துத்வா பற்றிய விவாதத்தில் அதிமுகவுடன் விவாதத்திற்கு பாஜக ரெடியாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்கு என்ற டார்கெட் வைத்துள்ளோம். எங்கள் கணிப்பு படி நிறைய இடத்தில் கடுமையான போட்டி உள்ளது. வெற்றி வித்தியாசம் குறைவாக இருக்கும். நிறைய தலைவர்கள் இந்த முறை போட்டியிட்டு இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்கு என்பதில் தெளிவாக உள்ளோம்.

பிரகாஷ் ராஜ்: நடிகர் பிரகாஷ் ராஜ் 2019 தேர்தலில் டெபாசிட்டை இழந்தவர். அங்கே டெபாசிட்டை இழந்த ஒரு நடிகர் என்பது தான் பிரகஷ் ராஜ்ஜிற்கு ஒரு அனுபவம். எந்த கட்சியாக இருந்தாலும் எதிர்ப்பதற்கு நான் இருக்கிறேன் என்பது கேட்பதற்கு நன்றாக இருக்கும். நடிகராக பிரகாஷ் ராஜ் மீது மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறோம். அரசியலில் பிரகாஷ் ராஜ் குரலுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வேண்டியது இல்லை.
திரித்து பேசுகிறார்கள்: பிரகாஷ் ராஜ் பேச்சை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பிரதமர் 40 தொலைக்காட்சிக்கு மேல் பேட்டி கொடுத்து இருக்கிறார். இங்கே ஒரு வேலையை செய்வதற்காக அனுப்பப்பட்டவன் நான். என்னுடைய வேலை கர்மா என்னவெனது எனக்கு தெரியும். அப்படி பிரதமர் சொன்னதை மாற்றி அதை நாலுபேர் ஸ்டேஜில் பேசுறாங்க.. இதற்கு என்ன சொல்வது.. திரித்து பேசுபவர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்.
திருமாவளவன் பொறுப்போடு பேசனும்: மோடி எதிர்ப்பு என்பது பல எல்லைக்கு சிலர் கொண்டு போய்விட்டார்கள். ஜனநாயகத்தில் விமர்சித்து பேச முழு உரிமை உள்ளது. பாஜக அப்படித்தான் பார்க்கிறது. திருமாவளவன் பேசும் போது பொறுப்போடு பேச வேண்டும். சனாதனம் என்பதை மாற்றி மாற்றி பேசுகிறார்கள். சனாதனம் என்பதையே திரித்து பேசுகிறார்கள்.
கருத்துரிமை பற்றி பேச: பாஜக ஆட்சியில் இருக்கும்வரை மாற்றுக்கருத்து கொண்டவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. ஸ்டாலினை போல காலையில் 2 மணிக்கு வந்து கைது செய்ய மாட்டோம். குண்டாஸ் போட மாட்டோம். பாஜக ஆட்சியில் அப்படி நடக்காது.
கருத்துரிமையை நசுக்கி ஆட்சி செய்யும் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. இந்துத்வா என்பது மதம் சார்ந்தது அல்ல. அது ஒரு வாழ்வியல் முறை; இந்துத்வா குறித்து அதிமுகவுடன் விவாதம் செய்ய பாஜக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications