சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜக அல்ல.. உண்மையில் தனித்து விடப்பட போவது அதிமுகவாகத்தான் இருக்கும்!

வரும் நாடாளுமன்ற அஇஅதிமுக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது?

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்திற்கு நன்மை செய்யும் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும்- வீடியோ

    சென்னை: இந்த 2 கட்சிகளை வைத்துதான் கூட்டணி முடிவுகள் வெளியாகும் நிலை வந்துள்ளதால், பிக்சர் ஓரளவுக்கு கிளியராகி வருகிறது.

    திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் கூட்டணிக்கு பலமான அஸ்திரத்தை போட்டுள்ளன.

    இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மறைமுகமாக ஆதரவு தந்து கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் திமுக படு தெளிவாக உள்ளது. திமுக கூட்டணி வலிமையாக உள்ளதால், அதற்கு சவாலாக தம்முடைய கூட்டணியும் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஆளும் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் ஏற்பட்டுள்ளது.

    அதிமுக கூட்டணி

    அதிமுக கூட்டணி

    சில தினங்களுக்கு முன்பு வரை பாஜகவும், அதிமுகவும் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. இது பல கட்டங்களில், தருணங்களில் வெளிப்படவும் செய்தது. ஆனால் சமீப காலமாக அதிமுக மூத்த தலைவர்களும், எம்பிக்களும் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பேசி வருகின்றனர்.

    எதிர்ப்பு வலுக்கிறது

    எதிர்ப்பு வலுக்கிறது

    இதில் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக தாக்கி வருவது தம்பிதுரைதான். நாடாளுமன்றத்திலேயே லெஃப்ட் ரைட் வாங்கி வருகிறார். இதனால் அதிமுகவில் தங்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது என்பதை பாஜக உணர ஆரம்பித்துள்ளது. மேலும், இதுவரை தங்களுடன் யாருமே கூட்டணிக்கு வராமல் உள்ளதையும் பாஜக உணர்ந்துள்ளது.

    யாருடன் கூட்டணி?

    யாருடன் கூட்டணி?

    அதிமுகவின் மூத்த தலைவர்கள் பாஜக வேண்டாம் என்று ஒதுக்குவதால், இரு கட்சிகளிடையே மோதலும் வலுக்க தொடங்கி உள்ளது. இப்போது பிரச்சனை என்னவென்றால், பாஜக வேண்டாம் என்றால் அதிமுக யாருடன் கூட்டணி அமைக்கபோகிறது என்பதுதான்? அதேபோல, காத்து கிடந்து எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தநிலையில், பாஜக யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பதும் கேள்வியாக எழுந்துள்ளது.

    பாஜக எதிர்ப்பு

    பாஜக எதிர்ப்பு

    அதிமுக இல்லையென்றால், மீதம் இருக்கும் கட்சி பாமக, தேமுதிகதான். இதில் ராமதாஸ் தினமும் பாஜகவை கண்டபடி வறுத்தெடுத்து விமர்சித்து வருகிறார். ஆனாலும் மறைமுகமாக கூட்டணி பேச்சு தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவால், பாஜகவுக்கு பிரச்சனையே இல்லை என்பதால் அதில் சிக்கல் இருக்காது. இந்த லிஸ்ட்டில் புதிய தமிழகம் சேரவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    பாமக செல்வாக்கு

    பாமக செல்வாக்கு

    இந்த இரு கட்சிகளையும் பாஜக இழுத்துக் கொண்டு தாராளமாக சீட்டும் கொடுத்து, சிறப்பாக கவனித்து விட்டால் அதன் பிறகு அதிமுகவுடன் இணைய யாரும் இல்லாத வித்தியாசமான சூழல் ஏற்படும். வட மாவட்டங்களில் வலுவாக உள்ளதால் பாமகவால் பாஜகவுக்கும் ஓசியில் பலன் கிடைக்கும். அதிமுகவுக்குத்தான் பலத்த அடி கிடைக்கும். வட மாவட்டங்களில் தேமுதிகவுக்கும் ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பதால் அது அதிமுகவுக்கு மேலும் பலவீனத்தையே கொடுக்கும்.

    வாசன் வர வாய்ப்பு

    வாசன் வர வாய்ப்பு

    ஆனால் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெறும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் திமுக கதவு வாசனுக்கு அடைக்கப்பட்டு விட்டதால் அவர் அதிமுக பக்கம் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கவலைக்கிடம்தான்

    கவலைக்கிடம்தான்

    ஆக, இப்போதைக்கு பாஜகவுக்கு கூட்டணிக்கு ஆள் இல்லை என்ற தோற்றம் காணப்பட்டாலும் கூட உண்மையில் அதற்கும் சில கட்சிகள் இருக்கத்தான் செய்கிறது. அதை வைத்து ஏதாவது சித்து விளையாட்டு காட்ட அது முயற்சிக்கலாம் என்பதை மறுக்க முடியாது. எனவே, அதிமுகவின் நிலைதான் உண்மையில் சற்று கவலைக்கிடமாக உள்ளது என்பதே நிதர்சனம்.

    English summary
    What are the stances of the AIADMK and BJP parties? The Alliance of the AIADMK and BJP parties has not yet been finalized.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X