‛‛திமுக மாஸ்’’.. தமிழகத்தில் ரிப்பீட்டாகும் 2019.. அதிமுக - பாஜகவுக்கு எக்ஸிட் போலில் பேரதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணி 38 முதல் 39 லோக்சபா தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
அதன்பிறகு 6 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவாகி உள்ள ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதா? இல்லாவிட்டால் மீண்டும் பாஜக ஆட்சியை தொடர்கிறதா? என்பது தெரிந்துவிடும்.

இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இதில் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் ஜெயிப்பது யார் என்பது பற்றி பல கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதில் ஒன்று தான் போல் டிராக்கர். தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகளை நடத்தி வரும் போல் டிராக்கரின் எக்ஸிட்போல் ரிசல்ட் முடிவுகள் தற்போது ளெியாகி உள்ளன. அதன்படி தமிழகத்தில் திமுக தலைமையிலான ‛இந்தியா' கூட்டணி 38 முதல் 39 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றது. அதேபோல் இந்த முறையும் தமிழகத்தில் திமுக கூட்டணி தான் அதிக இடங்களை அள்ளும் என போல் டிராக்கர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக அதிமுக 0 முதல் ஒரு தொகுதியில் வெல்லலாம் என கூறப்பட்டுள்ளது 2019 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிமுக ஒரு இடத்தில் வென்ற நிலையில் அதேபோல் இந்த முறையும் அந்த கட்சி ஒரு தொகுதியில் வெல்ல வாய்ப்புள்ளதாக போல் டிராக்கரின் எக்ஸிட்போலில் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் மீண்டும் கால்பதிக்க ணே்டும் என்ற முனைப்பில் பாஜக தனியே கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. ஆனால் போல் டிராக்கரின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்பது பாஜகவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications