தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்களின் திட்டத்துக்கு பயன்படுத்தப்படாத ரூ.5,138 கோடி.. ஆர்டிஐயில் தகவல்
தமிழ்நாட்டில் ஆதிதிராவிட மக்களின் நலன்கருதி ஆதிதிராவிடர் துணை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிட மக்களுக்கான துணை திட்டத்தில் கடந்த 2016 முதல் 6 ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் ரூ.5,138 கோடி பயன்படுத்தப்படாமல் கருவூலத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள ஷாக் தகவல் ஆர்டிஐ மூலம் வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் முந்தைய அதிமுக மற்றும் தற்போதைய திமுக அரசுகள் இரண்டும் அலட்சியமாக செயல்பட்டு வருவது ஆர்டிஐ மூலம் தெளிவாகி உள்ளது.
ஆதிதிராவிட மக்களின் நலன் கருதி ‛ஆதிதிராவிடர் துணை திட்டம்((Scheduled Caste Sub Plan) என்பது நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒவ்வொரு துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தனியே நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.
இதில் மத்திய, மாநில அரசுகள் பங்களிப்பு செய்கின்றன. இதன்மூலம் அனைத்து துறைகள் மூலமாகவும் ஆதிதிராவிடர் மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைக்கும். தற்போது இந்த திட்டம் பல மாநிலங்களில் முறையாக செயல்பாட்டில் இல்லை. தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

ஆர்டிஐ தகவல்
இந்நிலையில் தான் மதுரை மாவட்டம் திருமால்புரம் அருகே உள்ள மாரணியேந்தல் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சில விபரங்களை கோரியிருந்தார். அதாவது 2016-17 முதல் 2022-23 வரையிலான காலக்கட்டத்தில் ஆதிதிராவிடர் துணை திட்டத்துக்க ஒதுக்கப்பட்ட நிதியின் விபரம், துறைவாரியான விபரம் மற்றும் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்ட நிதியின் விபரங்களை வழங்கும்படி கேட்டிருந்தார்.

ரூ.5,318 கோடி திருப்பி அனுப்பிவைப்பு
இதற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலலத்துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அதாவது கடந்த 2016-17 ம் ஆண்டு முதல் 2021-22ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.5,318 கோடி நிதி பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் திட்ட நிதியின் குறிப்பிட்ட அளவு மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆண்டு வாரியாக
ஆண்டு வாரியாக பார்த்தால் 2016-17ல் ரூ.295 கோடியும், 2017-2018 ல் ரூ.667 கோடியும், 2018-19 ஆண்டில் ரூ.553 கோடியும், 2019-2020ல் ரூ.456 கோடியும் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 2020-2021ம் ஆண்டில் ரூ.926 கோடியும், 2021-2022ல் அதிகபட்சமாக ரூ.2,418 கோடியும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 2022-23 ஆண்டில் மொத்தம் ரூ.16,442 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாத நிலவரப்படி செலவிடப்படாமல் ரூ.10,466 கோடி உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

ரூ.5,138 கோடி திருப்பி அனுப்பி வைப்பு
மொத்தமாக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.75,930 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.70,969 கோடி செலவிடப்பட்டது. மாறாக, ரூ.5,318 கோடி திருப்பி கருவூலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த அதிமுக, திமுக அரசுகள் ஆதிதிராவிடர் மக்களுக்கு துணை திட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் இருந்தது இந்த ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications