ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது..சங் பரிவார்களின் நோக்கம் இதுதான்..தடதடத்த திருமாவளவன்
சென்னை: தமிழ்நாட்டில் ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது. ஆகவே, சங்க்பரிவார்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் சாதியின் பெயரால் வன்முறையை தூண்டுவதுதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கடுமையாக சாடினார்.
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். மணமக்களை வாழ்த்திய திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, "தமிழ்நாட்டில் ஸ்ரீராம் பெயரைச் சொல்லி அரசியல் செய்ய முடியாது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் எச்.ராஜா போன்றோரை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது:- சாதிய அடிப்படையில் முரண்பாடுகளை தோற்று வித்து மோதல்களை உருவாக்குவது சங் பரிவார்களின் திட்டம். இங்கே அவர்களால் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எழுப்பி ராமர் பெயரை சொல்லி சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைத்து ஆதாயம் தேட முடியாது.
அவர்கள் நினைப்பது போல் இங்கு சிறுபான்மையினர் கணிசமான அளவு இல்லை. அதேபோல இங்கு ராமர் பெயரால் அரசியல் செய்து சாதிக்க முடியாது. ஆகவே, அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் சாதியின் பெயரால் வன்முறையை தூண்டுவதுதான். தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டம் செயல்ட உள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனதார பாராட்டி வரவேற்கின்றது..
சாதி அடிப்படையில் மோதல்களை உருவாக்குவது சங் பரிவார அமைப்பின் திட்டம். சாதிப் பெருமையை பேசுவது மதவாத அரசியல் அம்பேத்கர் பெரியாரைப் பிடித்தவர்கள் சாதி அரசியலை பேச மாட்டார்கள். ஆன்மீக சொற்பொழிவாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதே போல் எச். ராஜா போன்றோர் வன்முறையை தூண்டக்கூடிய வகையில் பேசுவோர்களை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் கலைஞர் மகளிர்ர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் குடும்ப தலைவிகள் மத்தியில் உரிமைத்தொகை திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1 கோடி மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நாளை துவங்கி வைக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனதார பாராட்டுவதாக தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications