தமிழகத்தில் மஞ்சப்பை திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் மஞ்சப்பை திட்டம், மக்கள் இயக்கமாக மாறியுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் மூலம் பிளாஷ்டிக் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை லயோலா கல்லூரியில், Indian science monitor அமைப்பின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் கருத்தரங்கில், தமிழக சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். மேலும், பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களிடம் அமைச்சர் மெய்யநாதன் எடுத்துரைத்தார்.

இயற்கையை பாதுகாக்க நடவடிக்கை
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் பேசியவதாவது: பூமி தாய்க்கு நன்றி செலுத்தும் இந்த தினத்தில், நாம் இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தை பசுமை தமிழகமாக மாற்றுவதற்கு 'பசுமை தமிழகம் இயக்கம்' மற்றும் சதுப்பு நிலங்களை காக்க 'சதுப்பு நில இயக்கம்', 'கிரீன் தமிழ்நாடு' உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை தொடங்கி, இயற்கையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மீண்டும் மஞ்சப்பை திட்டம்
கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை எனும் திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் 20 சதவீத பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்பட்டு, இது ஒரு மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. மண்ணையும், மக்களையும், கடல் வாழ் உயிரினங்களையும் மாசு படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம்.

பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்குகள்
மனிதர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவது பூமித்தாய்தான். அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடுக்கும் நோக்கத்தில், வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் இதுதொடர்பாக சென்னை வர்த்தக மையத்தில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளது,

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள்
தமிழகத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் வெளிமாநிலங்களிலிருந்து தான் வருகிறது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் 174 கம்பெனிகள் முழுவதுமாக மூடப்பட்டிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக எவ்வாறு மக்கள் துணிப்பைகளையும், மஞ்சப்பைகளையும் பயன்படுத்தினார்களோ, அந்தக் கருத்தை மக்களிடத்தில் மீண்டும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் முயற்சியை சிறப்பு திட்டமாக செய்ய உள்ளோம். மக்கள் கூடும் இடங்களில் இதுபோன்ற பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரங்களையும் கொண்டு சேர்த்து இருக்கிறோம்.

தமிழ்நாடு கிளைமேட் சேஞ்ச் மிஷன்
தமிழகத்தில் 1076 கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள கடற்கரை பகுதிகள் அமைந்துள்ளது. இதில், முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களை உள்ளடக்கிய 500 கிலோ மீட்டர் பரப்பளவில், தமிழ்நாடு கிளைமேட் சேஞ்ச் மிஷன் மூலமாக 173 கோடி ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 500 கோடி ரூபாய். இத்திட்டத்தின் மூலம் கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள பனை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம். இதன்மூலம் கடல் அரிப்பை தடுக்கும் திட்டங்களையும் செயல்படுத்த உள்ளோம்.

மெரினா கடற்கரையில் பேனா சிலை
எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தால் சென்னையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு ஏற்ப திட்டமிட்டு அதற்கான செயல் திட்டங்களை எதிர்காலத்தில் நிறைவேற்றுவோம். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, மெரினா கடற்கரையில் பேனா சிலை அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications