"184"ஐ முந்துமா மிஷன் 200.. தடுக்க துடிக்கும் அதிமுக.. அதிரடி புயலை கிளப்ப தயாராகும் திமுக!
1971 தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது
சென்னை: "184" என்ற நம்பர் இந்த தேர்தலில் அதிகமாக முணுமுணுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அதென்ன 184? யாருடைய நம்பர், என்ன நம்பர் இது?
1971-ல் திமுக முதல் பொதுத்தேர்தலை சந்தித்து.. எத்தனையோ சோதனைகளை கடந்து, அறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு நடந்த தேர்தல் இது.. முதல் முறையாக திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேர்தல் இது.
அதுவரை எதிரும் புதிருமாக இருந்த காமராஜரும், ராஜாஜியும் ஓரணியில் திரண்டது இந்த தேர்தலில்தான்.. இவர்கள் 2 பேரும் சேர்ந்து பிரமாண்ட கூட்டங்களை சென்னையில் நடத்தினர்.. இந்த கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் திரண்டு வந்ததை பார்த்து, நாடே வியந்துவிட்டது.

வெற்றி
இறுதியில், சட்டசபைக்கு 203 இடங்களில், போட்டியிட்ட திமுக 184 இடங்களை லட்டுபோல கைப்பற்றியது... திமுகவுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்று அப்போது யாருமே எதிர்பார்க்கவில்லை. பிரமாண்டமான வெற்றியை பெற்று, 2வது முறையாக கருணாநிதி தலைமையில், 13 அமைச்சர்களுடன் திமுக அரியணை ஏறியது..

அதிமுக
அதோடு சரி, திமுகவாகட்டும், அதிமுகவாகட்டும், இன்னும் இந்த 184-ஐ எட்டிப்பிடிக்க முடியவில்லை.. 1996-ல் திமுக 173 சீட்டை பிடித்தது என்றாலும், இந்த சீட்டை எட்டிப்பிடிக்க முடியவில்லை. எம்ஜிஆர் இருந்தும் இந்த நம்பரை தொட முடியவில்லை.. இப்போது கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை.. அதுமட்டுமல்ல, இந்த முறை போட்டியிடும் அத்தனை பேரும் தேர்தலுக்கு புதுமுகங்களே.

கருணாநிதி
கருணாநிதி இல்லாமல் ஸ்டாலினும், ஜெயலலிதா இல்லாமல் எடப்பாடியாரும், தேர்தலை சந்திக்க போகிறார்கள். கமலுக்கும் புதுசு.. ரஜினிக்கும் புதுசு.. மிச்சமுள்ள முதல்வர் வேட்பாளர் கனவில் இருப்போருக்கும் இந்த தேர்தல் புதுசுதான். இப்போது ஏன் இந்த பேச்சு அடிபடுகிறது என்றால், வருகின்ற தேர்தலில் திமுக, அதிமுக 2 பேருமே கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்கி தந்துவிட்டு, மிச்சமுள்ள 200 தொகுதிகளிலும் தாங்களே இறங்கி போட்டியிட போவதாக சில மாதங்களாகவே தகவல்கள் கசிந்து வருகின்றன.

எதிர்பார்ப்பு?
ஒருவேளை இவர்கள் 200, 200 என்ற சீட்டுகளுடன் தேர்தல் களத்தில் குதித்தால், அதேசமயம் மக்களின் அமோக ஆதரவும் இவர்களில் யாராவது ஒருவருக்கு கிடைத்தால், இந்த 184 என்ற சாதனையை வெல்வார்களா? 50 வருட சாதனையை முறியடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்புதான்!
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு












Click it and Unblock the Notifications