"என்றைக்குமே ஆன்மீகம் தான் திமுகவுக்கு முதல் எதிரி" துக்ளக் விழாவில்.. அட்டாக் மோடில் குருமூர்த்தி
சென்னை: துக்ளக் இதழின் 52ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பேசிய ஆசிரியர் குருமூர்த்தி இந்தி திணிப்பு, திராவிட மாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.
துக்ளக் இதழின் 52ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, இந்தி திணிப்பு, திராவிட மாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

ஆன்மீகம் தான் எதிரி
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆடிடர் குருமூர்த்தி, "மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதே தேச விரோதம் தான். சட்டம், நீதி போன்ற அம்சங்கள் திமுகவிற்கு இல்லை. என்றைக்குமே ஆன்மீகம் தான் திமுகவுக்கு முதல் எதிரி. திமுக ஆட்சிக் காலத்தில் நாத்திகர் வேடத்தில் ஆத்திகர்கள் வருகிறார்கள். அப்படி வருகிறவர்களால் தான் ஆபத்து அதிகம்.

பெட்ரோல் விலை
தற்போது பாஜக தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலையால் பல மாநில பிரச்சனைகள் தீர்கிறது. அவர் என்றாவது ஒரு நாள் நிச்சம் தமிழகத்தின் தலைவர் ஆவார். 30 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் என்பதற்காக ஏழு பேரை விடுதலை செய்வது தவறான நடவடிக்கை. அதேபோல பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று தவறாகக் கூறி வருகிறார்கள். ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்பட வேண்டும்.

கருணாநிதிக்கு இந்தி தெரிந்திருந்தால்
கருணாநிதி இயற்கையான தலைவர். தமிழக அரசியலை ஒரேயடியாகத் திருப்பிப் போட்டவர். அந்தளவுக்கு விஷயமறிந்தவர். கருணாநிதி மட்டும் இந்தி படித்திருந்தால் இந்தியா ஆபத்தில் சிக்கியிருக்கும். எம்.ஜி.ஆர் காரணமாகவே தமிழகம் பிழைத்தது. அதிமுக 33 ஆண்டுகள் ஆட்சி செய்யாமல் போயிருந்தால் தமிழகமே காடாக மாறியிருக்கும். அனைவரும் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. இந்தி அலுவல் மொழி குறித்த அமித் ஷா கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. அவர் இந்தி கட்டாயம் என்றோ, இந்தி திணிப்பதை ஆதரித்தோ எதுவும் பேசவில்லை.

திமுக- அதிமுக
திமுக அதிமுக என இரு கட்சிகளும் லஞ்சத்தில் பங்கு போட்டுக்கொள்கிறார்கள். இருவரில் யார் ஆட்சியில் இருந்தாலும் இதே நிலை தான் தொடரும். திமுகவில் ஒவ்வொரு தலைமுறையும் கருணாநிதியாக முடியாது. காங்கிரஸில் ஒவ்வொரு தலைமுறையும் நேருவாக முடியாது. காங்கிரஸ் கட்சி மோடி எதிர்ப்பு என்ற நிலையை விட்டுவிட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிக்கையாளர்கள் பிரதமர் மோடியை எதிர்க்கிறார்கள். ஸ்டாலினைப் பற்றி எழுதப் பயப்படுகிறார்கள். உண்மையை மறைக்கவே பத்திரிக்கைகள் போராடுகிறார்கள்.

அண்ணாமலை
பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே பயங்கரவாதத்தைத் தடுத்து அழிக்க முடியும். முத்தலாக் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இதைச் செய்ய வேறு எந்த அரசியல் கட்சிக்கும் முதுகெலும்பு இல்லை. இதன் காரணமாகவே முஸ்லீம் பெண்கள் மோடிக்கு வாக்களித்தனர். அதேபோல இந்தி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை சிறப்பானதாக இல்லை. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது பிடிக்கவில்லை.

திராவிட மாடல்
குடி பழக்கம் இல்லாத தலைமுறையைக் குடிக்கு அடிமையாக்கியது திராவிட மாடல் ஆட்சியாளர்கள். திராவிட மாடல் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஈவேரா தமிழ், தமிழர்கள் காட்டுமிராண்டிகள் என்று சொன்னது திராவிட மாடலின் முதல் பரிமாணம். ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைத் தொடங்கியதும் திராவிட மாடலின் சாதனை. திராவிட மாடல் என்பதே முதல்வரைப் புகழ்ந்து பாடும் பஜனையாக மாறிவிட்டது" என்று அவர் பேசினார்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications