"குழல்ஹாசன்".. ரகசியமாக முஸ்லிம்களை மிதித்தது திமுக.. கருணாநிதி தேற்றினாரா.. வரிந்து கட்டிய இன்பதுரை

இஸ்லாமியர்களை ரகசியமாக மிதித்தது திமுக என்று அதிமுக இன்பதுரை காட்டமாக விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முஸ்லிம்களின் உணர்வை மதித்தவர் அம்மா... ரகசியமாக மிதித்தது திமுக என்ற உண்மையை உரைத்த குழல்ஹாசனுக்கு நன்றி'' என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை காட்டமாக மநீம தலைவர் கமல்ஹாசனை விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.. இந்த முறை கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை அளித்துள்ள கமல்ஹாசன், பிரச்சாரத்தையும் முன்னெடுத்துள்ளார்.

இந்நிலையில்தான் விஸ்வரூபம் பட பிரச்சனை விவகாரம் அடிபட்டுள்ளது.. கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம், கடந்த 2013ம் ஆண்டு வெளியான நிலையில், அந்த படத்தின் ரிலீசின்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.. கமல் ரசிகர்கள் ஒருபக்கம் கொந்தளித்து கிடக்க, கமலும் படத்தை ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகளை எடுத்திருந்தார்.

 ஊதுகுழல் கமல்

ஊதுகுழல் கமல்

அதாவது, அந்த படம் வெளியாக இருந்த நிலையில், அந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இருந்ததாகவும், அதனால் அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.. இதையடுத்து, தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.. பிறகு, நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது... அந்த சமயத்தில், இது தொடர்பாக தனக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட்டது என்பது குறித்து நேற்றைய தினம் ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன் வெளிப்படையாக கூறியிருந்தார்.

 கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி

நான் விஸ்வரூபம் என்ற படம் எடுத்தபோது, என்னை தடுமாற வைத்து சிரித்தார் அந்த அம்மையார்.. அப்போது கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா? என்று கேட்டார்.. உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள், நான் இருக்கிறேன் என்று இப்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் என்னிடம் சொன்னார்.. அதற்கு நான், இது ஒன்றும் தேச பிரச்சனை கிடையாதே.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய இருவரிடம் சொன்னேன்" என்று கமல்ஹாசன் கூறியதுடன், வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்திருந்தார்.

 மிதித்த திமுக

மிதித்த திமுக

கமல் கட்சி ஆரம்பித்த இத்தனை வருடங்களில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி எங்குமே பெரிதாக பேசியதும் இல்லை, குற்றம் சாட்டியதும் இல்லை.. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை மய்யம் சந்தித்தபோதும்கூட, ஜெயலலிதாவை குறித்து விமர்சனமும் செய்ததில்லை.. ஆனால், இந்த முறை இடைத்தேர்தலில், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தந்து இன்ப அதிர்ச்சி தந்துள்ள கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலினையும், மறைந்த முதல்வர் கருணாநிதி பற்றியும் சிலாகித்து நேற்று பேசியிருந்தது அனைவராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.. கமலின் இந்த பேச்சுக்கள் சோஷியல் மீடியாவிலும் வீடியோவாக ஷேர் ஆகி வருகிறது..

 குழல்ஹாசன்

குழல்ஹாசன்

இந்நிலையில், "விஸ்வரூபம் படம் விவகாரத்தில் என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஒரு அம்மையார்" என்று என்று கமல் கூறியிருந்ததையடுத்து, இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை... ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார்.. அதில், "இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதால்தான் விஸ்வரூபம் படத்தை அம்மா அரசு தடைசெய்தது... தன்னை தடுமாற வைத்தவர் அம்மா. தேற்றியவர் கருணாநிதி என திமுகவின் ஊதுகுழலான கமல்ஹாசன் பேசியுள்ளார். ஆக முஸ்லிம்களின் உணர்வை மதித்தவர் அம்மா. ரகசியமாக மிதித்தது திமுக என்ற உண்மையை உரைத்த குழல்ஹாசனுக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார் இன்பதுரை.

ராஜ் சத்யன்

ராஜ் சத்யன்

இதனிடையே, மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யனும் தன்னுடைய கண்டனத்தை வலிய பதிவு செய்துள்ளார்... இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுகவின் மதுரை மண்டல ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் பல்வேறு காட்சிகள் இருந்ததாலும், அதனை இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்த்ததாலுமே படம் அன்றைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

ரெட்ஜெயண்ட் நடிகர்

ரெட்ஜெயண்ட் நடிகர்

இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டார் என கமல்ஹாசன் சித்தரிக்கப் பார்ப்பது கபட நாடகம் மற்றும் கடைந்தெடுத்த கோழைத்தனம். இஸ்லாமியர்களுக்காக என்றும் அதிமுக துணை நிற்கும் என்பதை ஈரோடு வாழ் இஸ்லாமியர்களுக்கு நினைவூட்டிய ரெட்ஜெயன்ட் கம்பனி நடிகராகவும் - திமுகவின் தரம் தாழ்ந்த பேச்சாளராகவும் மாறிவிட்ட முன்னாள் மய்ய தலைவருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கமல் தெரிவித்துள்ள கருத்தானது, இணையத்தில் விவாதத்தையும், அதையொட்டிய பரபரப்பையும் கிளப்பி விட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+