Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எமோஷனல்".. என்னாது, "வாக்குமூலம்" தந்தாரா கமல்? அதுவும் "அவர்" கிட்ட.. வீடியோவே போட்டுட்டாரே இன்பதுரை

இஸ்லாமியர்களை ரகசியமாக மிதித்தது திமுக என்று அதிமுக இன்பதுரை காட்டமாக விமர்சித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முஸ்லிம்களின் உணர்வை மதித்தவர் அம்மா... ரகசியமாக மிதித்தது திமுக என்ற உண்மையை உரைத்த குழல்ஹாசனுக்கு நன்றி'' என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மநீம தலைவர் கமல்ஹாசனை விமர்சித்திருந்த நிலையில், இப்போது மீண்டும் விஸ்வரூப பட விவகாரத்தை கிளப்பி உள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.. இந்த முறை கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை அளித்துள்ள கமல்ஹாசன், 4 நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்தையும் செய்திருந்தார்.

அப்போது, தான் நடித்த விஸ்வரூபம் படம், கடந்த 2013ம் ஆண்டு வெளியான நிலையில், அந்த படத்தின் ரிலீசின்போது ஏற்பட்ட சில பிரச்சனைகள் குறித்து கமல்ஹாசன் தன்னுடைய பிரச்சாரத்தில் கூறியிருந்தார்.

 விஸ்வரூபம்

விஸ்வரூபம்

அதாவது, அந்த படம் வெளியாக இருந்த நிலையில், அந்த படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இருந்ததாககூறி, அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.. இதையடுத்து, தமிழகத்தில் விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டதாக செய்திகளும் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.. இதற்கு பிறகு, நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது.. இதை பற்றிதான், ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன் வெளிப்படையாக கூறியிருந்தார்.

 ராஜ் சத்யன்

ராஜ் சத்யன்

நான் விஸ்வரூபம் என்ற படம் எடுத்தபோது, என்னை தடுமாற வைத்து சிரித்தார் அந்த அம்மையார்.. அப்போது கருணாநிதி என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா? என்று கேட்டார்.. உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள், நான் இருக்கிறேன் என்று இப்போதைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் என்னிடம் சொன்னார்.. அதற்கு நான், இது ஒன்றும் தேச பிரச்சனை கிடையாதே.. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய இருவரிடம் சொன்னேன்" என்று கமல்ஹாசன் கூறியதுடன், வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்திருந்தார்.

 மிதித்த திமுக

மிதித்த திமுக

கமல் கட்சி ஆரம்பித்த இத்தனை வருடங்களில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி எங்குமே பெரிதாக பேசியதும் இல்லை, குற்றம் சாட்டியதும் இல்லை.. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை மய்யம் சந்தித்தபோதும்கூட, ஜெயலலிதாவை குறித்து விமர்சனமும் செய்ததில்லை.. ஆனால், இந்த முறை இடைத்தேர்தலில், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தந்து இன்ப அதிர்ச்சி தந்துள்ள கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலினையும், மறைந்த முதல்வர் கருணாநிதி பற்றியும் சிலாகித்து பேசியிருந்தது அனைவராலும் உற்று கவனிக்கப்பட்டது.. அத்துடன், "விஸ்வரூபம் படம் விவகாரத்தில் என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஒரு அம்மையார்" என்று கமல் சொல்லவும், அதிமுகவே கொந்தளித்துவிட்டது.

 குழல்ஹாசன்

குழல்ஹாசன்

எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரும், ராஜன் செல்லப்பாவின் மகனும், அதிமுகவின் மதுரை மண்டல ஐடி விங் செயலாளருமான ராஜ் சத்யன் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில், "கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை புண்படுத்தும் பல்வேறு காட்சிகள் இருந்ததாலும், அதனை இஸ்லாமிய கூட்டமைப்புகள் எதிர்த்ததாலுமே படம் அன்றைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டு அம்மா அவர்கள் தனக்கு எதிராக நடந்து கொண்டார் என கமல்ஹாசன் சித்தரிக்கப் பார்ப்பது கபட நாடகம் மற்றும் கடைந்தெடுத்த கோழைத்தனம். இஸ்லாமியர்களுக்காக என்றும் அதிமுக துணை நிற்கும் என்பதை ஈரோடு வாழ் இஸ்லாமியர்களுக்கு நினைவூட்டிய ரெட்ஜெயன்ட் கம்பனி நடிகராகவும் - திமுகவின் தரம் தாழ்ந்த பேச்சாளராகவும் மாறிவிட்ட முன்னாள் மய்ய தலைவருக்கு நன்றி" என்று தெரிவித்திருந்தார்.

 மிதித்த திமுக

மிதித்த திமுக

அதேபோல, அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரையும் கமலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.. அதில், "இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதால்தான் விஸ்வரூபம் படத்தை அம்மா அரசு தடைசெய்தது... தன்னை தடுமாற வைத்தவர் அம்மா. தேற்றியவர் கருணாநிதி என திமுகவின் ஊதுகுழலான கமல்ஹாசன் பேசியுள்ளார். ஆக முஸ்லிம்களின் உணர்வை மதித்தவர் அம்மா. ரகசியமாக மிதித்தது திமுக என்ற உண்மையை உரைத்த குழல்ஹாசனுக்கு நன்றி" என்று காட்டமாக பதிவிட்டிருந்தார் இன்பதுரை. ஆனால், இன்பதுரை அத்துடன் விடவில்லை.. இன்றைய தினம் மறுபடியும் இதே விவகாரத்தை கிளப்பி உள்ளதுடன், "விஸ்வரூபம் திரைப்பட விவகாரம்" என்று தலைப்பிட்டு ஒரு வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்.

வாக்குமூலம்

அந்த வீடியோவில் கமல் பேசுகிறார்.. அதாவது, விஸ்வரூபம் பட ரிலீஸ் பிரச்சனை தீர்ந்ததுமே, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கமல் ஒரு வீடியோவை அன்று வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், "விஸ்வரூபம், வரும் வியாழக்கிழமை 7ம் தேதி, 2013-ல் கடைசியாக தமிழகமெங்கும் வெளியாக உள்ளது.. நீதி சற்றே நின்று வந்தாலும், அன்றே ஆவணம் எல்லாம் செய்து, எனக்கு உடன் உதவி செய்தமைக்கு, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி" என்று கமல் கூறியிருந்தார். இந்த வீடியோவைதான் இன்பதுரை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்ததுடன், "அன்றைய முதல்வர் அம்மா அவர்களுக்கு திரு.கமலஹாசன் உணர்ச்சிமயமாக நன்றி தெரிவிக்கும் வீடியோ! வாக்குமூலம் எனவும் பொருள் கொள்ளலாம்!" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+