விலகி விலகி... அதிமுகவில் அதிகமாக இணைந்து.. தாமரைக்கனி மகன் இன்பத் தமிழன் புதிய சாதனை
அமமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளார் இன்பத்தமிழன்
சென்னை: அமமுகவில் இருந்து ஒரு விக்கெட் விழுந்துள்ளது. தாமரைக்கனியின் மகன் இன்பத்தமிழன்தான் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார்.
அன்றைய அதிமுகவின் அசைக்க முடியாத நபராக விளங்கியவர் தாமரைக்கனி. ஐந்து முறை ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்எல்ஏவாக இருந்தவர் தாமரைக்கனி. இவரது மோதிர கையினால் குட்டுப்பட்ட எதிர்க்கட்சிகள் ஏராளம்.

காலசூழலால் ஜெயலலிதாவை எதிர்க்கும் நிலைமை தாமரைக்கனிக்கு ஏற்பட்டது. விளைவு... மகன் அதிமுக சார்பில் போட்டியிட, சுயேச்சையாக நின்று மகனிடம் தோற்று போனார் தாமரைக்கனி. காலத்தின் கோலம்.. தந்தையும் - மகனும் கடைசி வரை சேராமலேயே போய்விட்டனர். தாமரைக்கனியும் இறந்துவிட்டார்.
மாவட்ட அதிமுக செயலாளராக இன்பதமிழனை பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா. அமைச்சராகவும் நியமித்தார். ஆனால் ஜெயலலிதாவுடன் இன்பத்தமிழனுக்கு அதிருப்தி ஏற்பட்டு, திமுகவுக்கு சென்றார். திமுகவிலும் சரியாக இவர் கவனிக்கப்படாததால், திரும்பவும் அதிமுகவுக்கு வந்தார். ஜெ.மறைவுக்கு பிறகு கட்சியில் செல்வாக்கு இல்லை என்றதும், அமமுகவுக்கு வந்தார். அமமுகவின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது.
இப்போது தேர்தலில் அமமுக மண்ணை கவ்வியதும், திரும்பவும் அதிமுகவில் இணைந்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து தன்னை கட்சியில் இணைத்து கொண்டுள்ளார். கூட்டி கழித்து பார்த்தால், இதுவரை அதிமுகவில் அதிகமாக இணைந்த நபர் இன்பதமிழனாகத்தான் இருக்க முடியும்! இதனால், சில சமயம் இவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்பது கூட நமக்கு மறந்தே விடுகிறது!
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications