கேம் ஓவர்.. பல மாநிலங்களில் பாஜக தலைவர்களுக்கு செக்.. அண்ணாமலைக்கும் ராஜினாமா நெருக்கடி? அப்போ 2026?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக மிக மோசமாக செயல்பட்ட நிலையில் அந்த கட்சிக்கு எதிராக கடுமையான சில பிரஷர் வைக்கப்பட்டு வருகிறதாம். முக்கியமாக பாஜக தேசிய தலைவர் நட்டா, அமித் ஷா ஆகியோருக்கும் கடுமையான பிரஷர் கொடுக்கப்படுகிறதாம்.
2024 லோக்சபா தேர்தலில் 400 இடங்களில் வெல்லும் என்று பாஜக முதலில் டார்கெட் வைத்து இருந்தது. ஆப் கி பார் சார் சோ பார் என்று கோஷம் எழுப்பினார்கள். ஆனால் அதன்பின் இந்த கோஷத்தை பாஜக கைவிட்டது. 400 இடங்கள் எல்லாம் வெல்ல வாய்ப்பே இல்லை என்று பாஜக இப்படி காய் நகர்த்தியது.

முக்கியமாக 400 இடங்களை வென்றால் பாஜக அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றும் என்றெல்லாம் வாதங்கள் வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பிரச்சாரத்தை பாஜக கைவிட்டது.
இதற்கு அடுத்து பாஜக 370 இடங்களில் வெல்வோம் என்று இலக்கு வைத்தது. சட்ட பிரிவு 370ஐ நீக்கியதை ஒப்பிட்டு இந்த இலக்கை பாஜக நிர்ணயம் செய்தது. ஆனால் இதுவும் வாய்ப்பு இல்லை என்று பாஜக பின்னர் புரிந்து கொண்டது.
தோல்வி; கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.
இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 40 இடங்களை வைத்து இருக்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார், ஷிண்டே சிவசேனா ஆகியோரின் உதவிதான் மோடி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
தோல்வி: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக மிக மோசமாக செயல்பட்ட நிலையில் அந்த கட்சிக்கு எதிராக கடுமையான சில பிரஷர் வைக்கப்பட்டு வருகிறதாம். முக்கியமாக பாஜக தேசிய தலைவர் நட்டா, அமித் ஷா ஆகியோருக்கும் கடுமையான பிரஷர் கொடுக்கப்படுகிறதாம்.
அதன்படி பஞ்சாப்பில் பாஜக ஜீரோ எடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் சரியாக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் ஜீரோ எடுத்துள்ளது. இதனால் இந்த 3 மாநிலங்களில் பாஜக தோல்வி காரணமாக மாநில தலைவர்களை மாற்றும் எண்ணம் டெல்லி பாஜகவிற்கு உள்ளதாம்.
அண்ணாமலை உட்பட பலருக்கு ராஜினாமா நெருக்கடி கொடுக்கப்படலாம் என்கிறார்கள். இதை மடைமாற்றவே அண்ணாமலை 2026 முதல்வர் என்று பேச தொடங்கிவிட்டார் என்கிறார்கள். இந்த நிலையில்தான் அண்ணாமலை உட்பட பலரின் பதவி காலி ஆகலாம் என்கிறார்கள்.
அதோடு இல்லாமல் ஜேபி நட்டாவின் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பல மாநில தலைவர்கள், தேசிய தலைவர் ஜே பி நட்டா மாற்றப்படலாம். அமித் ஷாவிற்கும் பிரஷர் வரும். அமைச்சர் பொறுப்போடு நிறுத்த வேண்டும், தேர்தல் வியூகங்களை வகுக்க கூடாது என்று பிரஷர் வர உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
-
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
அடிச்சு தூக்க போகுது தமிழக பாஜக.. இப்படியொரு சடன் மாற்றம்? இங்கே திமுக, அங்கே தவெக! தாங்குமா தாமரை? -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications