வருமான சான்றிதழ்.. கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம்.. தமிழக அரசு தந்த மேஜர் உத்தரவு.. நோட் பண்ணுங்க
சென்னை: கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் குறித்து, முக்கிய உத்தரவு ஒன்றினை தமிழக பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிலையான வளர்ச்சியே தமிழக அரசின் முதன்மையான நோக்கமாக திகழ்ந்து வருகிறது.. அந்தவகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொதுப்பிரிவினர் அளவிற்கு கொண்டுவருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளது.

நிதியுதவி: அதற்கு நிதியுதவிகளை அளித்து தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், இணைப்புச் சாலைகள், வீட்டுமனைப் பட்டா, வீடுகள், ஆரம்பப் பள்ளிகள், விடுதிகள், சுகாதார மையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றையும் வழங்கி வருகிறது.
அந்தவகையில், கல்வி உதவித்திட்டத்தையும் வழங்கி வருகிறது. அந்தவகையில், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கல்வி உதவித்தொகைக்கான இணையதளம், சில மாதங்களுக்கு முன்புகூட, அன்று திறக்கப்பட்டது. இப்போதுவரை, கிட்டத்தட்ட 3 லட்சம் மாணாக்கர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். இனியும் இந்த விண்ணப்பங்கள் அதிகமாகும் என்று எதிர்நோக்கப்படுகின்றன.
ஆதார் கார்டு: இந்த திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023ம் கல்வியாண்டு முதல், முதன்முறையாக e- KYC முறையில் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்படுகிறது. பிறகு, இணையத்தில் பெறப்பட்ட சாதிச்சான்று, வருமானச் சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களையும் இணைய வழியில் சரிபார்க்கப்படுகிறது.
இறுதியில், மாணாக்கர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு (Aadhaar seeded to bank Account) கல்வி உதவித் தொகை மாணாக்கர்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் கல்வி உதவித்தொகை இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிகல்வி இயக்குனர் அறிவொளி, அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
வருமான சான்றிதழ்: "ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகள் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியான மாணவர்கள், தங்களின் ஜாதி சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப வருமான சான்றிதழும் வாங்கி வர வேண்டும்.. கல்வி உதவி தொகையானது வரும் காலத்தில், மாணவரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
அதனால், மாணவரின் வங்கி கணக்கில், பெற்றோரின் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த தகவல்களை மாணவர்களுக்கு தெரிவித்து, உரிய சான்றிதழ்களை மாணவர்களிடம் பெற்று, நவம்பர் 15க்குள் "எமிஸ்" என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிகளை அறிவுறுத்த வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications