வருமான சான்றிதழ் வேணுமா? பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சி தகவல்.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி
சென்னை: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன. இந்த பணிகளை இந்த மாதத்திற்குள்ளேயே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
நம்முடைய தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 37000-ம் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.. இந்த பள்ளிகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து வருகிறார்கள்.

எமிஸ் பதிவு: அரசுப்பள்ளியை தவிர, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை "எமிஸ்" தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் மாணவர்கள் பெற்றோர் விவரங்கள், முகவரி, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
ஆனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலருக்கோ, ஆதார் அட்டையே கிடையாது.. அரசு திட்டங்களை பெற வேண்டுமானாலும் சரி, உயர்கல்விக்கான உதவித்தொகை பெற வேண்டுமானாலும்சரி, வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டுமானாலும் சரி, ஆதார் எண்தான் அடிப்படையாக தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கு திட்டங்களை செயல்படுத்தவும் அவர்களுக்கான விபரங்களை பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாகும் .
மாணவர்கள்: அதனால்தான், ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்றைய தினம் அதாவது பிப்ரவரி 23 முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் துவங்கியிருக்கின்றன. அந்தவகையில், பள்ளிகளில் படிக்க வரும் குழந்தைகளுக்கு ஆதார் பெறுவதற்கு சேவை மையங்களுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில், எல்காட் நிறுவனம் மூலம் நேற்றிலிருந்து பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்றைய தினம் தொடங்கி வைத்தார்.. தமிழ்நாட்டில் முதல் முறையாக மாணவர்களுக்கு இந்த ஆதார் பதிவு செய்யும் திட்டத்தினை, கோயம்புத்தூர் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி வைத்தார்.
சான்றிதழ்கள்: பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்ச்ர, "தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதுமட்டுல்லாமல், பள்ளி மாணவர்களுக்கான சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், அவர்களின் பெற்றோரின் வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இவை எல்லாமே இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அதற்கான வசதிகள் பள்ளிகளிலேயே ஏற்படுத்தி தரப்படும்.
4வது பெற்றோர் மாநாடு கோவையில் நடைபெற்று வருகிறது.. திருப்பூர், நீலகிரி, ஈரோட்டில் சேர்ந்த பெற்றோர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இது போன்ற மாநாடுகளின் வாயிலாக முதல்வர் ஸ்டாலின், கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் தரப்பு நன்கொடை வழங்குவது அதிகரித்துள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்: இந்த 4 மாவட்டங்களில் மட்டும் இதுவரை அரசு பள்ளிகளுக்கு ரூ.448 கோடி மதிப்பீட்டில் நிலங்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.. பல பெற்றோர்கள், ஒரு ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை நன்கொடையாக வழங்க பத்திரங்களை தந்துவிட்டு போயிருக்கிறார்கள்..
விரைவில் காஞ்சிபுரத்தில் 5வது பெற்றோர் மாநாடு நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊக்கம் தருவதின் அடிப்படையில் இந்த மாநாடு சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் தயாராகி கொண்டிருக்கின்றன"என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications