சென்னையில் உயர்த்தப்பட்ட வருமான வரி.. யாருக்கெல்லாம் எவ்வளவு வரி? ரொம்ப முக்கியம்.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் வரி மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தொழில் வரியை 35% உயர்த்த நேற்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2018ல் தொழில்வரி உயர்த்தப்பட்ட நிலையில் 5 வருடங்கள் கழித்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

தற்போது 35% உயர்த்த மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் மாத வருமானம் ரூ.21,000-க்குள் இருந்தால் தொழில் வரி வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.21,000 முதல் ரூ.30,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.135ல் இருந்து ரூ.180ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.315ல் இருந்து ரூ.430 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.690ல் இருந்து ரூ.930 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தொழில் வரியை வருமானதாரர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
வருமான வரி மாற்றம்: சமீபத்தில்தான் புதிய வருமான வரி முறையில் மாற்றங்களை செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பட்ஜெட் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற தனி நபர்களுக்கு உரிமை உள்ளது. அதே சமயம் ஒரு நபர் இரண்டிற்கும் இடையே எத்தனை முறை மாறலாம் என்பதற்கு வருமான வரித்துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களின் வருமான வகை ஸ்லாப்பை பொறுத்தே இரண்டிற்கும் இடையில் மாறுவதற்கு அனுமதி அளிக்க முடியும்.
பிஸ்னஸ் செய்து வருவாய் வாங்கும் மக்கள்.. ஒரே ஒரு முறை மட்டும் பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற அனுமதிக்கப்படுவார்கள். அதாவது நீங்கள் பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு மாறினால்.. அதன்பின் மாற முடியும்.
பழைய வருமான வரி முறையை பயன்படுத்தும் நபர்கள்.. அதை புதிய முறைக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதே முறையை பயன்படுத்தி பழைய முறைக்கும் மாற முடியும். ஆனால் புதிய முறையில் இருந்து பழைய முறைக்கு மாற ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
பட்ஜெட் மாற்றம்: பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள வருமான வரி மாற்றம் புதிய வருமான வரி முறையை தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மாத ஊதியம் பெறுவோருக்கு நிரந்தர கழிவு ரூ50,000-ல் இருந்து ரூ75,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் - ரூ.7 லட்சம் பெறுவோருக்கு 5% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் - ரூ.10 லட்சம் பெறுவோருக்கு 10% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சம் - ரூ.12 லட்சம் பெறுவோருக்கு 15% வரி விதிக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் - ரூ.15லட்சம் பெறுவோருக்கு 20% வரி விதிக்கப்படும்.
வருமான வரி: மேற்கண்ட வகையில் புதிய வருமான வரி முறையில் மாற்றங்களை செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பழைய முறை அப்படியே தொடரும். பழைய வரி விதிப்பு முறையில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கவனிக்க வேண்டிய விஷயம்: இப்போது புதிய முறையை தேர்வு செய்தவர்களுக்கு ஏழு லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை. நேற்று அறிவிப்பை சேர்த்தால்.. அதாவது ஸ்டான்டர்ட் டிடக்ஷன் 75,000 என்று மாற்றப்பட்டதால் 7,75,000 வரை வருமான வரி இல்லை.
ஆனால் அதற்காக இந்த 7.75 லட்சத்திற்கு மேல் 1 ரூபாய் வருமானம் வந்தால் அதற்கு 20,010 ரூபாய் வருமான வரி கட்ட வேண்டும் என்று நினைக்க வேண்டாம். இப்போது உள்ள விதியில்.. 7.75 லட்சத்திற்கு கீழ் வருமானம் வந்தால் வரி கிடையாது.. அதே சமயம் 7.75 லட்சத்திற்கு மேல் வரும் வருமானம் 10% வரிசையை விட.. அதாவது 20,010 ரூபாய் வருமான வரியை விட குறைவாக இருந்தால்.. அந்த வருமானத்தையே வரியாக செலுத்தலாம்.
இதனால் 7.75 லட்சத்தோடு நீங்கள் கூடுதலாக 10 ஆயிரம் வருமானம் பெறுகிறீர்கள். நீங்கள் அந்த 10 ஆயிரத்தை வரியாக செலுத்தலாம். இதற்காக நீங்கள் 20,010 ரூபாய் வருமான வரியை செலுத்த வேண்டியது இல்லை. இந்த வரி முறையை புரிந்து கொண்டு உங்கள் பொருளாதார திட்டங்களை நீங்கள் மேற்கொள்ளலாம்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications