இரவில் குவிந்த அதிகாரிகள்! சென்னையில் பிஎஸ்கே க்ரூப்பிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு
சென்னை: சென்னையில் உள்ள பிரபல பிஎஸ்கே குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறார்கள். பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் அமைந்துள்ள பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் இப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டில் இறங்கியுள்ளனர். நகரில் பல இடங்களில் பிஎஸ்கே நிறுவனத்திற்குச் சொந்தமான அலுவலகங்கள் உள்ள நிலையில், அங்கெல்லாம் சோதனை நடப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இதே பிஎஸ்கே குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருந்தது. இதற்கிடையே மீண்டும் இப்போது அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் தான் சேலம் இளங்கோவன் தொடர்பான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அந்த சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இப்போது பிஎஸ்கே குழுமத்தில் சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
சென்னையில் பட்டினப்பாக்கம், லூப் சாலை, டூமீங்குப்பம் ஆகிய பகுதிகளில் பிஎஸ்கே குரூப் குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications