Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் பண்ணிட்டீங்களா? refund கேட்டவர்களுக்கு.. IT தந்த மிகப்பெரிய சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரித் துறை, அதன் இணையதளத்தில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு இந்த புதிய அம்சம் பெரிய அளவில் பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய வசதி மூலம், மக்கள் தாக்கல் செய்த வருமான வரி ரிட்டர்னை மதிப்பீட்டு அதிகாரி (Assessing Officer - AO) அல்லது வருமான வரி ஆணையர் (மேல்முறையீடுகள்) எப்போது பார்த்தார் அல்லது ஆய்வு செய்தாரா என்பதன் சரியான தேதி மற்றும் நேரத்தை வரி செலுத்துவோர் இப்போது அறிந்து கொள்ள முடியும்.

income tax ITR

வருமான வரி தாக்கல்

இந்த புதிய வசதி, வரி செலுத்துவோர் தங்கள் சமர்ப்பிப்புகள் வரி அதிகாரியால் எப்போது சோதனை செய்யப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. இது வரி செலுத்துவோர்களுக்கு மிக முக்கியமானது என்று வரி நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த அம்சம், மக்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் வருமான வரி அதிகாரியால் உண்மையில் பார்க்கப்பட்டது என்பதற்கான உறுதிப்பாட்டை வழங்குகிறது.

இது வரி செலுத்துவோரிடையே நிலவும் நிச்சயமற்ற தன்மையை நீக்கி, செயல்பாடுகளை கண்காணிக்க உதவுகிறது. மேலும், தங்களது கோரிக்கைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றோ அல்லது தாமதப்படுத்தப்பட்டது என்றோ கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் பலருக்கும் இப்போது வரி ரிட்டர்ன் refund கிடைக்கவில்லை. அதிக refund கேட்டு ரிட்டர்ன் செய்தவர்களுக்கு அந்த தொகை இதுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 50 ஆயிரத்திற்கு மேல் ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களுக்கு அந்த refund தொகை இதுவரை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடைசி தேதி நிறைவு அடைந்தும் கூட இன்னும் பலரும் refund கிடைக்கவில்லை.

வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்த பலரும், இன்னும் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் ரீஃபண்ட் தொகைக்காகக் காத்திருக்கின்றனர். 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை (ITR) நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவான செப்டம்பர் 15-க்கு முன்பே தாக்கல் செய்திருந்தாலும், இந்தத் தாமதம் பல வரி செலுத்துவோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரீஃபண்ட் தாமதமாவதற்கான முக்கிய காரணங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

வருமான வரி ரிட்டர்ன்

வரி சரிபார்ப்பு மற்றும் அதிலுள்ள செயல்முறைத் தடைகள் ரீஃபண்ட் தாமதத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். வரிக் கணக்கைத் தாக்கல் செய்தவுடன், அதை மின்னணு முறையில் சரிபார்ப்பது (e-verify) மிக அவசியம். இந்தச் சரிபார்ப்பை 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஆதார் OTP, நெட் பேங்கிங் அல்லது கையொப்பமிட்ட ஒப்புகைச் சீட்டை பெங்களூரில் உள்ள CPC-க்கு அஞ்சலில் அனுப்புவதன் மூலம் இதை மேற்கொள்ளலாம்.

இந்தச் சரிபார்ப்பு படிநிலையைத் தவறவிட்டால், தாக்கல் செய்யப்பட்ட கணக்கு செல்லாததாகக் கருதப்படும். இதனால் ரீஃபண்ட் பெறும் செயல்முறை தடைபடும். சில சமயங்களில், வரிக் கணக்குகள் சரிபார்க்கப்பட்டாலும், அவை முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் இருக்கலாம். இத்தகைய சூழல்களில், வரி செலுத்துவோர் செயலாக்கம் முடிவடையும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

தாமதம் நீண்டால், வரி செலுத்துவோர் வருமான வரி போர்ட்டலில் உள்நுழைந்து "CPC-ITR" பிரிவின் கீழ் ஒரு புகாரைப் பதிவு செய்து, விரைவான செயலாக்கத்தைக் கோரலாம். வங்கித் தொடர்பான பிழைகளும் ரீஃபண்ட் தாமதத்திற்குக் காரணமாக அமைகின்றன. வங்கிகள் இணைக்கப்பட்டதாலும், IFSC குறியீடுகள் மாறியதாலும், கணக்கு விவரங்கள் தவறாக இருந்தால் ரீஃபண்ட் செயல்முறை பாதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+