IT Raid in MGM: வரி ஏய்ப்பு புகார்.. எம்.ஜி.எம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை
நட்சத்திர விடுதி, கேளிக்கை பூங்காக்களை நடத்தி வரும் எம்.ஜி.எம் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: தீம்பார்க், நட்சத்திர விடுதி நடத்தும் எம்.ஜி.எம் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக சென்னை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
சென்னையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ளது எம்.ஜி.எம் டிஸ்ஸி வேல்ட் பொழுது போக்கு பூங்கா. சென்னை மக்களின் பொழுது போக்கு தளங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக எம்.ஜி.எம் உள்ளது.

இந்த நிறுவனத்தின் சார்பாக நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இன்று காலை முதல் எம்.ஜி.எம். நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள எம்.ஜி.எம். தலைமை அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்காக வந்துள்ளனர். இதேபோல பெங்களூரு, நெல்லை, திண்டிவனம், காஞ்சிபுரம் உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட எம்.ஜி.எம். நிறுவனத்திற்கு தொடர்புடைய அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள்.
40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெறுவதால் அந்த நிறுவனம் சார்பாக நட்சத்திர ஹோட்டல்களை வாங்கியதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறையினருக்கு வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications