உஷாரா இருங்க.. ஷாக்கான சம்பளதாரர்கள்.. வருமான வரித்துறை வைக்கும் பெரிய செக்.. கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த ஆயிரக்கணக்கானோரின் வங்கிக் கணக்குகளில் நடைபெறும் தினசரி மற்றும் மாதந்திர பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவறான வருமானக் கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், வருமான வரித்துறை போர்வையில் மோசடி இணைப்புகளை சிலர் அனுப்பி வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மையில், பல்வேறு நபர்களுக்கு ஆயிரக்கணக்கில் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

income tax ITR

வருமான வரி

வருமான வரி கணக்குகளில் முறைகேடாக வரி விலக்கு கோருபவர்களைக் குறிவைத்து, நாடு முழுவதும் சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று காலை பல ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரி செலுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

சிறு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததற்கான விலக்குகள், சுகாதாரக் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகள் (பிரிவு 80D, 80DDB), HRA (பிரிவு 10(13A)), கல்வி மற்றும் வீட்டுக் கடன் வட்டி, வாகனக் கொள்முதல் தொடர்பான விலக்குகள் (பிரிவு 80E, 80EE, 80EEB) ஆகியவை விசாரணைக்கு உட்படுத்தப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது.


வருமான வரித்துறை போலவே மின்னஞ்சல் ஐடி

இந்தச் சூழலைப் பயன்படுத்தி மோசடிகள் அதிகரித்துள்ளன. வருமான வரித்துறை போலவே மின்னஞ்சல் ஐடிகளை உருவாக்கி மோசடி இணைப்புகளை அனுப்புவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த இணைப்புகளைக் கிளிக் செய்யும்போது, வருமான வரி மற்றும் வங்கி விவரங்கள் கேட்கப்பட்டு, பணம் திருடப்படலாம் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

வரி ஏய்ப்பைத் தடுக்கும் நோக்கத்துடன் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். முறையாக வருமானக் கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரி செலுத்துவோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வரி விதிப்பு

இந்த ஆய்வின் மூலம், வரி செலுத்துவோர் தாக்கல் செய்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, வரி ஏய்ப்பு தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தப்படும். சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நடவடிக்கை, வரி விதிப்புகளை முறையாகப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. வரி செலுத்துவோர் தங்கள் கணக்குகளைச் சரியாகப் பராமரித்து, உரிய நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதிக விலக்கு கோரிய MNC ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழில்முனைவோர் ஆகியோர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வருமான வரி தாக்கல் சீசன் முழு வீச்சில் இருக்கும் நிலையில், சம்பளம் வாங்கும் தனிநபர்கள் முதல் வணிக உரிமையாளர்கள் வரை அனைவரும் தங்கள் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்வதில் மும்முரமாக உள்ளனர். வருமான வரித் துறையில் ஒரு பெரிய மாற்றம் நடந்து வருகிறது. தற்போதுள்ள நவீன செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தரவு பகுப்பாய்வு கருவிகளை பயன்படுத்தி வரி விலக்கு கோரிக்கைகளை தீவிரமாக ஆராய்கிறது. அதாவது தவறாக தாக்கல் செய்யப்படும் வருமான வரி விலங்குகளை ஆராய ஏஐ கருவிகளை பயன்படுத்தி வருகின்றன.

வருமான வரிக் கணக்குகளில் மோசடியான விலக்குகள் மற்றும் சலுகைகளை கோருபவர்களை குறிவைத்து, நாடு தழுவிய சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+