6 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாத எஸ்ஜே சூர்யா.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2002-03 நிதி ஆண்டில் இருந்து 2009-10 நிதியாண்டு வரை இயக்குநரும், நடிகருமான எஸ்ஜே சூர்யா வருமான வரி செலுத்தவில்லை என்று கூறி வருமான வரித்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று எஸ்ஜே சூர்யா சார்பில் மனுத்தாக்கல் செய்த நிலையில் இந்த வழக்குகளை அவர் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்று கூறி மனுவை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதனால் எஸ்ஜே சூர்யா தனது மனுவை வாபஸ் பெற்றார். இது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா இயக்குநராகவும், நடிகராகவும் இருப்பவர் எஸ்ஜே சூர்பயா. இவர் கடந்த 2002-03 முதல் 2009-10 ம் ஆண்டு வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.

SJ Suryah

இதுதொடர்பாக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. எஸ்ஜே சூர்யா மீது மொத்தம் 6 வழக்குகள் உள்ளன. வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 6 வழக்குகளை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இது எஸ்ஜே சூர்யாவிற்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான 6 வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்ஜே சூர்யா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமான வரித்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த 6 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா 2022ம் ஆண்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இப்போது மீண்டும் அதே காரணத்தை கூறி மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனால் இதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் எஸ்ஜே சூர்யா 6 வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டும். அவரது மனுவை ஏற்க முடியாது என்றனர். இதையடுத்து எஸ்ஜே சூர்யா தரப்புமனுக்களை வாபஸ் பெறுவதாக கூறினர். இதை ஏற்று மனுக்களை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+