மு.க.அழகிரி மருமகன் வீட்டில் திடீர் ஐ.டி ரெய்டு.. தேர்தல் நேரத்தில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகன் வெங்கடேசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனையையொட்டி, பாதுகாப்பு கருதி அங்கு சிஆர்பிஎப் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பம் அரசியலில் பெரும் செல்வாக்கு உடையது. அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும், உயர் பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்துள்ளனர். கருணாநிதியின் மகன் முக அழகிரி மத்திய அமைச்சராக இருந்தவர். மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பியாக உள்ளார். மைத்துனர் முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்தவர். கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன் எம்.பியாக இருந்து வருகிறார். மகன் வழிப் பேரன் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உள்ளார்.

mk azhagiri

மு.க. அழகிரியின் மகளான கயல்விழி ஒரு கவிஞர். இவர் 2009-ல் திமுகவின் மகளிர் அணியின் பிரச்சாரச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் கட்டிடக் கலைஞரான வெங்கடேஷை மணந்துள்ளார். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மருமகன் வெங்கடேசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சாஸ்திரி நகரில் உள்ள வெங்கடேசன் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த சோதனையையொட்டி, பாதுகாப்பு கருதி அங்கு சிஆர்பிஎப் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் வேளையில், பணப்பட்டுவாடா தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மு.க.அழகிரியின் குடும்பம் அரசியலிலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறது. மு.க.அழகிரி தற்போது ஆக்டிவ் பாலிடிக்ஸில் இல்லை. அவரது மகன் துரை தயாநிதியும் அரசியலில் இல்லை. அழகிரியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த பி.எம்.மன்னன், எஸ்ஸார் கோபி ஆகியோர் அண்மையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில், மு.க.அழகிரியின் மருமகன் வீட்டில் ஐ.டி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்திலும் இது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+