சென்னையில் தொடரும் வருமான வரித் துறை சோதனை.. வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் ஓனர் வீட்டில் ரெய்டு நிறைவு
சென்னை: சென்னையில் இன்று 2ஆவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே பொதுவாக அமலாக்கத் துறை ரெய்டு, லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு, வருமான வரித் துறை என நடப்பது வழக்கம்தான். அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனை பரபரப்பை கிளப்பி வருகிறது.

மணல் குவாரி, கல் குவாரி, அரசு ஒப்பந்ததாரர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் அமைச்சர்கள், அவர்களின் பினாமிகள் உள்ளிட்டோரின் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுகிறது.
அந்த வகையில் சென்னை கே கே நகரில் உள்ள வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டன் வீடு மற்றும் அவருடைய அலுவலகத்தில் நேற்று முதல் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம், மண்ணடியில் உள்ள தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.
அது போல் கோபாலபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபரான வினோத் கிருஷ்ணா வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கே கே நகர் , தி நகர் பகுதிகளிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அது போல் பெங்களூர், கொச்சியில் உள்ள வழக்குத் தொடர்பாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் இரண்டாவது நாளாக சென்னையில் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் நீலகண்டன் வீட்டில் சோதனை நிறைவடைந்தது. மற்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications