சசிகலாவிடம் 5 பேர் கொண்ட வருமான வரி குழு விசாரணை.. பெங்களூர் சிறையில்
சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள்.
இதில் ஏராளமான நகைகள், பணம், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் போன்றவற்றை வருமான வரித்துறையினர் கைப்பற்றினார்கள்.

மறுத்து விட்டது
எனவே சோதனையில் சிக்கிய பொருட்கள், ஆவணங்கள் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை, ஏற்கனவே சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், சசிகலா மவுன விரதம் இருப்பதால் அதற்கு அனுமதி அளிக்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.

மீண்டும் கடிதம்
அதற்கு பிறகு 10 நாட்களுக்கு முன்பு மீண்டும் சசிகலாவிடம் 13, 14-ம் தேதிகளில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு, இன்னொரு கடிதத்தை சிறை நிர்வாகத்திற்கு அனுப்பினார்கள்.

இன்று, நாளை விசாரணை
இதற்கு சிறை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டதுடன், 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த விசாரணையில் இடம்பெற வேண்டும் என்ற குறிப்பையும் தங்களது கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள். அதன்படி, இன்றும் நாளையும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர்.

தனி அறை
இந்த இரு தினங்களிலும் அதிகாரிகள் சிறைக்கு சென்று சசிகலாவை ஒரு தனி அறையில் அமர வைத்து நேரடி விசாரணையில் இறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை தொடங்கியது. ஒரு பெண் உள்பட 5 பேர் அடங்கிய குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. மாலை வரை விசாரணை நடைபெறவுள்ளது. இதனால் சிறை வளாகம் பரபரப்பாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications