அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் வீட்டில் திடீர் ரெய்டு.. அதிமுகவினர் ஷாக்
சென்னை; விருதுநகர்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நெருங்கிய நண்பர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை. நடத்தப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் திமுகவினரை குறிவைத்து ரெய்டு நடப்பதாக பரவலாக புகார் உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை இன்று நடத்தப்பட்டது.
அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் கொதித்து போய் உள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல், பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்,

சோதனை
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கல்பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் முன்னாள் அதிமுக கட்சி நகர்மன்ற உறுப்பினராவார். மேலும் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் ஆவார். இவரது வீட்டில் இன்று வருமான வரி ரெய்டு நடந்தது

ராஜபாளையம்
கடந்த 10 ஆண்டுகளாக சிவகாசி நகரில் வெற்றிபெற்று அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சிவகாசியில் போட்டியிடாமல் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறை திமுக வென்ற தொகுதியாகும். எனினும் இந்த முறை ராஜபாளையத்தில் வெல்ல தனக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக நினைத்து களம் இறங்கி உள்ளார்.

நெருங்கிய நண்பர்
தீவிர பிரச்சசாரத்தில் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சிவகாசி அருகிலுள்ள திருத்தங்கல்லில் ராஜேந்திர பாலாஜியின் நெருங்கிய நண்பர் சீனிவாசன் வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எதிர்க்கட்சியினரின் புகாரின் அடிப்படையில் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

பெரும் பரபரப்பு
வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற மூன்று தினங்களே உள்ள நிலையில் தமிழக அமைச்சரின் நெருங்கிய நண்பரும் அதிமுக கட்சி நிர்வாகியுமான சீனிவாசனின் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறுவது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
