Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று முதல் புது நிதி ஆண்டு.. வருமான வரியில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. இதை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படாத நிலையில், பழைய மற்றும் புதிய வருமான வரி முறை அப்படியே தொடருகிறது. ஆனால் இதில் ஒரு சில விதிகள் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அப்படி இன்று முதல் அமலுக்கு வரும் மாற்றங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற தனி நபர்களுக்கு உரிமை உள்ளது. அதே சமயம் ஒரு நபர் இரண்டிற்கும் இடையே எத்தனை முறை மாறலாம் என்பதற்கு வருமான வரித்துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களின் வருமான வகை ஸ்லாப்பை பொறுத்தே இரண்டிற்கும் இடையில் மாறுவதற்கு அனுமதி அளிக்க முடியும்.

Income Tax Returns Things to change in the schemes from today

பிஸ்னஸ் செய்து வருவாய் வாங்கும் மக்கள்.. ஒரே ஒரு முறை மட்டும் பழைய மற்றும் புதிய வருமான வரி முறை இடையில் மாற அனுமதிக்கப்படுவார்கள். அதாவது நீங்கள் பழைய முறையில் இருந்து புதிய முறைக்கு மாறினால்.. அதன்பின் மாற முடியும்.

புதிய வருமான வரி முறைக்கு மாறுவதற்கான உங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் படிவம் 10IEஐப் பதிவிறக்கி நிரப்பவும். ஜூலை 31 க்கு முன் படிவம் 10IE ஐ சமர்ப்பிக்கவும். இதன் மூலம் பழைய வருமான வரி முறையை பயன்படுத்தும் நபர்கள்.. அதை புதிய முறைக்கு மாற்றிக்கொள்ள முடியும். இதே முறையை பயன்படுத்தி பழைய முறைக்கும் மாற முடியும். ஆனால் புதிய முறையில் இருந்து பழைய முறைக்கு மாற ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

1. புதிதாக இந்த வருடம் வருமான வரி கட்டுப்பவர்கள் தானாக புதிய வருமான வரி திட்டத்தில் வருவார்கள். பழையதை விரும்பும் நபர்கள் அதை தேர்வு செய்யலாம்.

2. முன்பு பழைய வரி முறைக்கு மட்டும் இருந்த நிலையான வரியான standard deduction எனப்படும் ₹50,000 இன்று முதல் புதிய வருமான வரிக்கும் அமல்படுத்தப்படும்.

3, 5 கோடிக்கு மேல் வருவாய் பெறுபவர்களுக்கு அதிகபட்சமாக 37% கூடுதல் கட்டணம் எனப்படும் சர்ஜ் சார்ஜ் வாங்கப்படும். இது 25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

4. ஏப்ரல் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு வழங்கப்படும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளின் முதிர்வுத் தொகையில் மொத்தப் பிரீமியத் தொகை ₹5 லட்சத்தைத் தாண்டினால் அதற்கு இன்று முதல் வரி விதிக்கப்படும்.

5. அரசு சாரா ஊழியர்களுக்கான விடுப்பு வருமான வரி விலக்கு வரம்பு ₹3 லட்சமாக இருந்தது, இன்று முதல் ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் வருமான வரி: 2023ல் செய்யப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வருடம் இதில் எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை. அதே சமயம் பழைய வருமான வரி விதிப்பு முறையில் (old regime) மத்திய அரசு கடந்த வருடமும் சரி, இந்த வருடமும் சரி.. எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

இப்போது உள்ள நடைமுறை: தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும்.

முதல் முறை - பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிய முறை; பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு முன்பு வரை, நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும்.

அதுவே 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை வாங்கினால் 10 சதவிகிதம் வரி இருக்கும். 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். நடைமுறையில் இருந்த இந்த புதிய வரி விதிப்பு முறையில் கடந்த பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது.

அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் . 300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் . 600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும் 900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும் 1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும் 15 மேல் வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் . புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது.

ஆனால் நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+