Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னது.. உங்களுக்கு இன்னும் வருமான வரி ஐடிஆர் ரீபண்ட் வரவில்லையா? உடனே இதை பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் உங்களுக்கு இன்னும் வருமான வரி தொகை வரவில்லை என்றால் இந்த செய்தியை படியுங்கள்.

குறித்த நேரத்தில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கும் ரிட்டர்ன்ஸ் கிடைத்துவிட்டது. பலருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது. ஆனால் சிலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் இன்னும் ரீ பண்ட் கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் விளக்கப்பட்டு உள்ளன.

Income Tax Returns: What do you have to do if you did not get an ITR refund to your account yet?

முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும்.வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.

இதில் கிட்டத்தட்ட 31 லட்சம் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விட்டுள்ளனர். ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செய்யவில்லை. இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ஏற்கனவே ரி பண்ட் சென்றுவிட்டது.

வருமானத்தில் வரி செலுத்துவோரின் கோரிக்கைகளை நிரூபிக்கும் விதமாக சில கூடுதல் ஆவணங்கள் வரி அதிகாரிக்கு தேவைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீங்கள் லோன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் கணக்கில் வீட்டு லோனிற்கான ஆதாரங்கள் இல்லையென்றால் அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் கேட்கப்படும். இதுபோன்ற சமயங்களில், வரி செலுத்துபவருக்கு இவற்றை வழங்குமாறு வரி அலுவலர் கோரிக்கைகளை அனுப்புவார். இவை வரி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், ரிட்டர்ன் தரப்படும்.

இந்தியாவில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தவர்களின் கிட்டத்தட்ட 31 லட்சம் பேருக்கு பணம் அனுப்பப்படவில்லை இவர்கள் உடனடியாக இ வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். வேறு காரணங்களுக்காக கணக்கில் பணம் பெறாதவர்கள் உடனடியாக அந்த தவறுகளை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஐடி ரிட்டர்ன்ஸ் அவர்களுக்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எப்படி கண்டுபிடிக்க வேண்டும்?: வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் உங்களுக்கு இன்னும் வருமான வரி தொகை வரவில்லை என்றால் பின்வரும் சோதனையை செய்யுங்கள்.

அதன்படி https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற வருமான வரித்துறை பக்கத்திற்கு செல்லவும். அதில் இன்கம் டேக்ஸ் ரிட்டன் (ITR) ஸ்டேட்டஸ் பக்கத்தில் சென்று உங்கள் லாகின் விவரங்களை கொடுத்து லாகின் செய்யவும்.

இதில் 'இன்கம் டேக்ஸ் ரிட்டன் (ITR) ஸ்டேட்டஸ்' பகுதியை கிளிக் செய்தால் அதில் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். அதன்பின் இ வெரிஃபிகேஷன் செய்தது கிரீன் கலரில் இருக்க வேண்டும். கடைசியாக processing மட்டும் கிரீன் ஆகாமல் இருக்கும்.

அப்படி இருந்தால் அதன் அர்த்தம் விரைவில் உங்கள் ரிட்டர்ன் சோதனை செய்யப்பட்டு பணம் கொடுக்கப்படும். ஒருவேளை அதுவும் கிரீன் கலரில் இருந்தும் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் உங்கள் மெயிலை சோதனை செய்யவும். அதில், இன்கம் டேக்ஸ் நோட்டிஸ், விலக்கம் கேட்டு மெயில் எதுவும் வந்துள்ளதா என்று பார்க்கவும்.

எவ்வளவு தொகை: ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 21 வரை வருமான வரித் துறை அதிக அளவு தொகையை கொடுத்துள்ளது. கடைசியாக தாக்கல் செய்த பலருக்கு இந்த வாரம் கொடுக்கப்படும். இதுவரை மட்டும் சுமார் ரூ.72,215 கோடி வரியை வருமான வரித்துறை திருப்பிச் செலுத்தியுள்ளது. தனி நபரை விட நிறுவனங்களுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 35 ஆயிரம் கோடி ரூபாய் தனி நபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதே சமயம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+