பத்திர பதிவு கட்டண உயர்வு விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் திருப்பம்..பெரிய குட்நியூஸ்
சென்னை: பத்திர பதிவு கட்டண உயர்வை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு பதிவு செய்வதற்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட முத்திரைத்தாள் கட்டணத்தை 6 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வங்கிக் கடனை திருப்பி செலுத்தாததால், அடமானமாக வைக்கப்பட்ட சொத்துகளை ஏலம் மூலம் வாங்கியவர்கள், அதற்காக வழங்கப்பட்ட விற்பனை சான்றிதழை, தங்கள் அருகிலுள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர்.

இதில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. சிலரின் விற்பனை சான்றை பதிவு செய்ய 7 சதவீத முத்திரைத்தாளும், 4 சதவீத பதிவுக்கட்டணமும் செலுத்த வேண்டும் என்று வசூலிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் பதிவு செய்யக் கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், சில விண்ணப்பங்கள் மீது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்தும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது..
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முக்கியமான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.இதன்படி, பத்திர பதிவுக்காக மொத்தம் 11 சதவீத கட்டணம் வசூலிப்பது என தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி முடிவு செய்துள்ளது. ஆனால், முன் தேதியிட்டு இந்த அரசாணை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் முன்தேதியிட்டு அரசாணையை அமல்படுத்த முடியாது.
இந்த வழக்கில் மனுதாரர்களின் விற்பனை சான்றிதழ்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தும்படி நிர்ப்பந்திக்காமல் அவர்களின் பத்திரப் பதிவினை கண்டிப்பாக செய்ய வேண்டும். பதிவு செய்வதற்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட முத்திரைத்தாள் கட்டணத்தை 6 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும்.இவ்வாறு தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக பத்திரப்பதிவு கட்டண உயர்வை தமிழக அரசு முன்தேதியிட்டு அமல்படுத்த முடியாது. அதேநேரம் முன்தேதியிட்டு பதிவு செய்வதற்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட முத்திரைத்தாள் கட்டணத்தை 6 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்கியாக வேண்டும்.
அண்மையில் தமிழக பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000 இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகபட்ச முத்திரைத்தாள் தீர்வை அதிகபட்சமாக ரூ.25,000 இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பொது அதிகார ஆவணங்களுக்கு (Power of attorney) பதிவுக் கட்டணம் ரூ.10,000 ஆக இருந்த நிலையில் சொத்தின் சந்தை மதிப்பில் ஒரு சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மக்கள் ரசீதுக்காக பதிவு செய்யும் ஆவணத்திற்கான கட்டணம் ரூ.20ல் இருந்து ரூ.200 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனி மனை பதிவிற்கான கட்டணம் ரூ.200 இருந்து ரூ.1,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவுத்துறை கடந்த ஜூலையில் உயர்த்திய கட்டணத்தால், சராசரியாக ரூ.50 லட்சத்திற்கு வீடு வாங்குவோருக்கு ரூ.1.25 லட்சம் முதல் 1.50 வரை உயரும் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications