45 வயசுல அம்மா செய்த காரியம்.. காது கேட்காது, பேச முடியாது.. 22 வருட ஆசைக்காக மகன் செம அசத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 45 வயதில் பலரும் தங்கள் படிப்பை பற்றி நினைச்சுக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால், ஜம்முவைச் சேர்ந்த ரேணு ஹான்ஸுக்கு 10-ம் வகுப்பு படிப்பு என்பது வெறும் படிப்பு இல்லை.. 22 ஆண்டுகளாக மனதுக்குள் வைத்திருந்த ஒரு கனவு. அந்த கனவை இப்போது அவர் நனவாக்கியிருக்கிறார். 82 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார்.. காது கேட்காத, பேச முடியாத மாற்றுத் திறனாளியான ரேணு, 406 மார்க் எடுத்துள்ளதற்கு பின்னணியில் ஒரு அழகான கதையும் இருக்கிறது.

ரேணு சிறுவயதில் மற்ற மாணவிகளைதான் பள்ளிக்கு சென்றிருக்கிறார்.. 10-ம் வகுப்பு தேர்வை எழுதியிருந்தார். ஆனால் அந்த நேரத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை. இதற்கு பிறகு வீட்டில் திருமணம் செய்து வைத்தார்கள்..

Jammu Education Achievement

ரேணுவின் குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் என பல ஆண்டுகளும் கடந்துவிட்டன. ஆனால், படிப்பு மட்டும் அப்படியே நின்றுவிட்டது. இருந்தாலும், மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.

சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த ஆசைக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஜம்மு காஷ்மீர் திறந்தநிலை பள்ளிக் கல்வி முறையின் மூலம் 10-ம் வகுப்பை மீண்டும் படிக்க முடிவு செய்தார் ரேணு. ஆனால், ஒரு சிக்கல் இருந்தது. இந்த வயதில் எப்படி படிப்பது? தேர்வுக்கு எப்படி தயாராவது? என்று தயங்கினார்.. அப்போதுதான் 12ம் வகுப்பு படித்து கொண்டிருந்த ரேணுவின் மகன் நமன், தன்னுடைய அம்மாவுக்கு உதவ முன்வந்தார்.

பிளஸ் 2 படிப்பை படித்துக் கொண்டே

தன்னுடைய பிளஸ் 2 படிப்பை படித்துக் கொண்டே, அம்மாவுக்கும் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். சாயங்கால நேரத்தில் அம்மாவுக்கான படிப்பு நேரத்தை ஒதுக்குவார். இரவில் அம்மாவுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தீர்த்து வைப்பார். அதே நேரத்தில் தனது பள்ளிப் படிப்பையும் கவனித்துக் கொண்டார்.

அம்மாவை தேர்வுக்கு பதிவு செய்வதற்காக நமனே முதலில் போர்டு அலுவலகத்துக்கும் சென்றார். ஆரம்பத்தில் அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டதாக அவரிடம் சொல்லப்பட்டது. பிறகு ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு ரேணுவை தேர்வுக்கு பதிவு செய்ய முடிந்தது. அதன் பிறகுதான் 10-ம் வகுப்பு தேர்வை எழுதும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

10ம் வகுப்பு தேர்வு

தேர்வு மையத்துக்கு சென்றபோதும் ரேணுவுக்கு கொஞ்சம் டென்ஷனாகவே இருந்திருக்கிறது. தன்னைவிட மிகவும் இளைய மாணவர்களும், வயதானவர்களும் அங்கு இருந்ததை பார்த்து முதலில் தயங்கியுள்ளார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சூழலுக்குப் பழகி தேர்வை எழுதினார்.

ஏப்ரல் மாதம் நடந்த 10-ம் வகுப்பு தேர்வின் முடிவுகள் செப்டம்பர் 10-ம் தேதி வெளியாகின. அதில் ரேணு 82 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார். 500-க்கு 406 மதிப்பெண்கள் என்பது சாதாரண வெற்றி கிடையாது.. 22 ஆண்டுகளாக நின்றுபோன ஒரு கனவுக்கு கிடைத்த பதில்.

ரேணுவின் வாழ்க்கையிலும் சவால்கள் குறைவாக இல்லை. அவர் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1990களின் தொடக்கத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து குடும்பம் வெளியேறியபோது, குல்காம் மாவட்டம் சாவல்காம் கிராமத்தில் இருந்த பூர்வீக வீட்டையும் விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது ஜம்முவின் லோயர் ரூப் நகரில் உள்ள அரசு குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ரேணுவின் கணவர் ஒத்துழைப்பு

ரேணுவின் கணவர் பாப்லு கவுலும் காது கேட்காத, பேச முடியாதவர்... வீட்டிலிருந்தே தையல் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார். ரேணு படிக்க வேண்டும் என்ற ஆசைக்கு அவரும் எந்தத் தடையும் போடவில்லை. "நீ வேலை செய்ய விரும்பினாலும் நான் உனக்கு ஆதரவாக இருப்பேன்" என்று மனைவியிடம் கணவர் சொன்னாராம்.

சின்ன வயதிலிருந்தே பெற்றோருடன் சைகை மூலம் பேசிப் பழகிய நமனுக்கும் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருந்ததில்லை. தாத்தா, பாட்டி மற்றும் உறவினர் ஒருவரின் உதவியுடன் பெற்றோரின் சைகைகளைப் புரிந்துகொள்ள கற்றுக்கொண்டார்... அவர்களுக்கு பாலமாகவும் திகழ்ந்து வருகிறார்.

கங்கிராட்ஸ் ரேணு

இப்போது ரேணுவின் அடுத்த கனவு என்ன என்பது தெரியவில்லை...ஆனால், 45 வயதில் அவர் எடுத்திருக்கும் இந்த ஒரு முயற்சி, படிப்புக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நொறுக்கி காட்டியிருக்கிறது.. அதைவிட முக்கியமாக, ஒரு தாயின் நீண்ட நாள் கனவை அவரது மகன் தனது படிப்புக்கு நடுவிலும் கைகொடுத்து நிறைவேற்றியிருக்கிறார்.

ரேணுவுக்கு இது 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமல்ல.. 22 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கையை மீண்டும் திறந்து பார்த்த ஒரு புதிய தொடக்கம்தான்.. கங்கிராட்ஸ் ரேணு...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+