வீட்டு சிலிண்டர் ரீஃபில் புக்கிங்கில் சிக்கல்! Dead-ஆன 77189 55555 போன் எண்! கேஸ் ஏஜென்சியில் மக்கள்
சென்னை: இண்டேன் கேஸ் ரீஃபில் புக்கிங் செய்வதற்காக வழங்கப்பட்ட தொலைபேசி எண் வேலை செய்யவில்லை. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏஜென்சிகளுக்கு காலி சிலிண்டர்களுடன் செல்கிறார்கள். அது போல் வடமாநிலங்களிலும் இதே நிலை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக வளைகுடாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு சப்ளை சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் வீட்டு உபயோகம், மருத்துவத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வணிக சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
உணவகங்கள்
இதனால் மதுரை, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் டீக்கடைகள், சிறு உணவகங்கள், விடுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் சிலிண்டர் கிடைக்காமல் டீ, காபி தயாரிப்பு குறைந்துள்ளது.
சில கடைகள் வடை உள்ளிட்ட உணவுகளைத் தவிர்த்து டீ மட்டும் தயார் செய்கின்றன அல்லது அடைக்க நேரிடுகிறது. விலை ஏற்கெனவே ரூ. 400 உயர்ந்த நிலையில் இப்போது கிடைக்கவே இல்லை.
வீட்டு சிலிண்டர்
மத்திய அரசு வீட்டு சிலிண்டர் முன்பதிவு காலத்தை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக உயர்த்தியுள்ளது. வணிக உபயோகிக்கும் மாற்று எரிசக்திகளை (எல்பிஜி அல்லாதவை) பயன்படுத்துமாறு இந்திய எண்ணெய் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் டீ-காபி வர்த்தகர் சங்கங்கள், விடுதி உரிமையாளர்கள் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.
ஹோட்டல்கள்
இது போல் திடீரென ஹோட்டல்கள் மூடப்படுவதாலும் சில உணவுகளை குறைப்பதாலும் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டு சிலிண்டர் புக்கிங்கிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்திய எண்ணெய் நிறுவனம்
இந்திய எண்ணெய் நிறுவனம் வழக்கமாக புக்கிங் செய்ய கொடுத்துள்ள செல்போன் எண் 77189 55555 என்ற எண் வேலை செய்யவில்லை. கடந்த இரு தினங்களுக்கு முன்பு போன் செய்த போது இந்த நண்பர் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது என வந்தது.
VIDEO | Noida: Long queue witnessed outside a gas agency in Sector 63 amid reports of LPG shortage due to the ongoing West Asia conflict.#LPG #NoidaNews
— Press Trust of India (@PTI_News) March 11, 2026
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/tm7SJFuPdL
போன் செய்தால்
தற்போது போன் செய்தால் கால் கனெக்ட் ஆகாமலேயே கட் ஆகிவிடுகிறது. இதனால் சிலிண்டர் புக்கிங் செய்ய மக்கள் தவித்து வருகிறார்கள். எனவே தங்களது கேஸ் சிலிண்டர் ஏஜென்சிகளுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் நாகை, ராமநாதபுரத்தில் இந்த பிரச்சனை எழுந்துள்ளது.
ரீஃபில் புக்கிங்
வடமாநிலங்களில் குறிப்பாக நொய்டாவில் மக்கள் காலி சிலிண்டர்களுடன் கேஸ் ஆபிஸ் முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். அது போல் மிஸ்டு கால் கொடுத்து ரீஃபில் புக் செய்யும் எண்ணான 8454955555 என்ற எண்ணும் வேலை செய்யவில்லை.
ரீஃபில் மெசேஜ்
77189 55555 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் REFILL என டைப் செய்தால் திங்கள்கிழமை வரை வேலை செய்தது. ஆனால் தற்போது மெசேஜ் போகிறது. ஆனால் புக்கிங் எண் குறித்த மெசேஜ் வரவில்லை. இந்த பதற்றமான நிலையை பார்க்கும் போது ஏதோ கொரோனா லாக்டவுன் போல் இருக்கிறது.
அப்போது வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோம். ஆனால் தற்போது சிலிண்டருக்காக ஏஜென்சிகளுக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் விறகு அடுப்புக்கும் இன்டெக்ஷன் ஸ்டவ்களுக்கும் மக்கள் மாறியுள்ளனர்.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications