கவனிச்சீங்களா.. சென்னையில் 3 நாளுக்கு இந்த ரோட்டில் நாட் அலோவுட்! டிராபிக் போலீஸ் முக்கிய அறிவிப்பு
சென்னை: ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இதற்கான ஒத்திகை ராஜாஜி சாலையில் ஆகஸ்ட் 4,10,13 தேதிகளில் நடைபெற இருக்கிறது. எனவே இந்த நாட்களில் இச்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி தமிழக அரசு சார்பில் சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை ஆகஸ்ட் மாதம் 4, 10 மற்றும் 13ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதனால் ராஜாஜி சாலையிலும், காமராஜா் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"4,10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு ஒத்திகை தொடங்கும். இது முடியும் வரை நேப்பியா் பாலத்திலிருந்து போா் நினைவுச் சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச் சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச் சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
காமராஜா் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம். அதேபோல், பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை,ஈ.வெ.ரா. பெரியாா் சாலை,பல்லவன் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை வந்தடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் வாலாஜா சந்திப்பு,முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை அடையலாம்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications