சுதந்திர தினம்.. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் முதல்வர் விஜய்! மக்கள் ஆரவாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக முதல்வர் விஜய் தேசியக்கொடி ஏற்றினார். நாடு முழுவதும் 80வது சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் விஜய் முதல்முறையாக தேசிய கொடியை ஏற்றினார்.

நாட்டின் 80-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. சுதந்திர நாளில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவது வழக்கம். அதன்படி இன்று காலையில் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி உரையாற்றினார். இதே போன்று மாநிலங்களில் முதல்வர்கள் கொடியேற்றி உரையாற்றுவார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் முதல் முறையாக இன்று மூவர்ணக்கொடி ஏற்றினார்.

Independence Day 2026 TN CM Vijay Hoists National Flag in St George Fort chennai

சுதந்திர தின விழா

இன்று காலை 8.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து முதல்வர் விஜய் புறப்பட்டார். மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை வந்ததும், சென்னை போலீசார் பைக்கில் முன்னும் பின்னும் அணிவகுத்து அவரை கோட்டைக்கு அழைத்து வந்தனர்.

காலை 8..35 மணியளவில் கோட்டை கொத்தளத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு விஜய் வந்தடைந்தார். முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் வந்ததை போன்றே இங்கும் கருப்பு நிற கோட் சூட்டில் வருகை தந்தார். அவரை தலைமை செயலாளர் சாய் குமார் வரவேற்றார். அதன்பிறகு மேடைக்கு வந்த விஜய், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை விஜய் பார்வையிட்டார்.

முதல் முறையாக கொடி ஏற்றினார்

அதன்பிறகு கோட்டை கொத்தளம் வந்த முதல்வர் விஜய், காலை 8.45 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தேசியக்கொடி ஏற்றி வைத்த பிறகு மக்களுக்கு உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவைகள் பற்றியும் முதல்வர் விஜய் பேசினார்.

சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகளையும் முதல்வர் விஜய் தனது உரையில் வெளியிட்டார். சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக முதல்வர் விஜய் தகைசால் தமிழர் விருது, டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, காவல்துறையினருக்கு பதக்கம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

மக்கள் ஆரவாரம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் விஜய் வழங்கினார். பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியின் தந்தை தான் கிருஷ்ணசாமி. முன்னாள் எம்பியான இவரின் மகன் விஷ்ணு பிரசாத், தற்போதும் காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட எம்பியாக இருக்கிறார்.

சுதந்திர தின நிகழ்ச்சியை நிறைவு செய்துவிட்டு முதல்வர் விஜய் காரில் ஏறி புறப்பட்டார். அப்போது நடிகை த்ரிஷா, தாய் ஷோபா, தந்தை எஸ்ஏ சந்திரசேகர், அமைச்சர்களுக்கு கையசைத்தவாறு காரில் சென்றார். இதன் பின் திடீரென காரில் இறங்கிய விஜய், பார்வையாளர்களுக்கு கையசைத்தவாறு நடந்து சென்றார். நீண்ட தூரம் நடந்து சென்று பார்வையாளர்களை நோக்கி கையசைத்தார். மக்களும் ஆரவாரம் செய்தனர்.

பலத்த பாதுகாப்பு

கடற்கரை சாலையில் விழாவைக் காண பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பாஸ் இல்லாமல் வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்த போலீசார் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. சென்னையில், கடந்த இரு தினங்களாக போலீசார் உச்சக்கட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தங்கும் விடுதிகளிலும் தீவிர ஆய்வு நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+