Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா கூட்டணி: பிரதமர் வேட்பாளர் யார்? போட்டியிட போவது எப்படி? இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் இரண்டாம் நாள் கூட்டம் மும்பையில் தற்போது தொடங்கி உள்ளது. பல்வேறு முக்கிய முடிவுகள் இன்று நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

28 கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.

India alliance meeting 2nd day: Opponent leaders are going to make important decision on Lok Sabha election

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் நேற்று மற்றும் இன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் இவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று மும்பையில் தொடங்கியது. மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி, சரத் பவார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் முமபையில் கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட கூட்டத்தில் கூட்டணியின் எதிர்கால வியூகம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். நேற்று கூட்டத்திற்குப் பிறகு இந்திய கூட்டணி தலைவர்களுக்கு தாக்கரே இரவு விருந்து அளித்தது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி உட்பட பல தலைவர்கள் கூட்டத்தில் அதிகம் கவனிக்கப்பட்டனர்.

India alliance meeting 2nd day: Opponent leaders are going to make important decision on Lok Sabha election

என்ன ஆலோசனை செய்யப்பட்டது?: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் சீட் பகிர்வு ஏற்பாட்டை எப்படி விரைவாக ஏற்படுவதுவது , கூட்டணியை எப்படி விரைவாக உறுதி செய்வது என்பது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோர் தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க நேரத்தை வீணடிக்க வேண்டாம், இதில் உடனே முடிவு எடுக்க வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தினர்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) எதிராகப் போராட எந்த தியாகமும் செய்யத் தயார் என்று கூட்டத்தில் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினும்.., எல்லா கட்சிகளும் ஒருங்கிணைந்து கூட்டணியை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

India alliance meeting 2nd day: Opponent leaders are going to make important decision on Lok Sabha election

இதற்கிடையில், பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் குறைகள் உள்ளிட்ட பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு செல்ல தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். கூட்டணி அமைப்பது எப்படி, போட்டியிடுவது எப்படி உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. இதில் இன்று இறுதி முடிவுகள் எடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

5 நாட்கள் நடக்க உள்ள திடீர் நாடாளுமன்ற கூட்டம் குறித்தும், தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் தேர்தலுக்கு முன் நடத்த வேண்டிய சர்வே குறித்தும் இதில் ஆலோசனைகள் செய்யப்பட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+