ஸ்டாலின் இருப்பே வேற லெவலில் மாறி இருக்கும்! மிஸ் பண்ணிட்டாரே! டெல்லியில் நடந்த பேச்சு! பரபர பின்னணி
சென்னை: இந்தியா கூட்டணியில் ஸ்டாலினின் இருப்பே வேறு லெவலில் இருந்திருக்கும்.. ஆனால் அதை ஸ்டாலின் மிஸ் செய்துவிட்டார் என்ற விவாதம் ஒன்று டெல்லியில் ஓடிக்கொண்டு இருக்கிறதாம்.
தேசிய அளவில் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நடந்தது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியில் பேசிய நிதிஷ்குமார்: இந்தியில் நிதிஷ்குமார் பேசிய போது, இந்தி தெரியாத தலைவர்கள் இங்கு இருப்பதால், ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று டி.ஆர்.பாலு சொல்லிய நிலையில், இந்தி தேசிய மொழி ; அதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் கோபமாக நிதிஷ் சொல்ல, அது சர்ச்சையானது.
என்ன நடந்தது: இந்த கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், முழுக்க முழுக்க இந்தியில் பேசி இருக்கிறார். இதற்கு மொழிபெயர்ப்பு கேட்டதற்கு நிதிஷ் குமார்.. மொழிபெயர்ப்பை நிறுத்த சொன்னதாகவும்.. ஆங்கில - பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து வெளியேறுங்கள். இந்தியில்தான் பேசுவேன். ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கொடுக்க கூடாது என்று வெடுக்கென்று பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவர் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசியதாக தெரிகிறது. இந்திய கூட்டணியில் இது பெரிய அளவில் பிளவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. கடுமையான மனக்கசப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. இது திமுகவிற்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. இந்திய கூட்டணியில் இனி திமுக என்ன செய்யும்.. திமுகவிற்கான மரியாதை அங்கே கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேறு கோணம்: இந்த விவகாரம், பாஜக- அதிமுக சீனியர்களிடம் வேறு ஒரு கோணத்தில் அலசப்படுகிறது. அதாவது, இந்திய கூட்டணியின் ஆலோசனையையும், இதில் கலந்துகொள்ள டெல்லி சென்ற ஸ்டாலின், அப்படியே மோடியை சந்திக்கவிருப்பதாக சொல்லப்பட்டதையும் உற்று கவனித்திருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. கூட்டணி கூட்டம் முடிந்து அது குறித்த செய்தி வெளியானதை அடுத்து அதிமுக சீனியர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினையையும் டி.ஆர்.பாலுவையும் அவமானப் படுத்தியிருக்கிறார் நிதிஷ்குமார்.
அவமானம்: இந்தியை கற்றுக்கொள்ளுங்கள் என நிதிஷ் சொன்னது ஒரு வகையில் இந்தி திணிப்பு போலத்தான். அதனால் நிதிஷ் சொன்னபோது அதை எதிர்த்து ஸ்டாலின் வெளிநடப்பு செய்திருந் தால், ஸ்டாலினின் அரசியல் தேசிய அளவில் எதிரொலித்திருக்கும். அந்த யோசனை ஸ்டாலினுக்கு இல்லை. இந்தி திணிப்பை எதிர்க்கும் லட்சனம் அவ்வளவுதான். தமிழகத்தில் இந்தியை பற்றி அவர் எப்போதாவது பேசினால், இந்த சம்பவத்தை நாம் நினைவுப்படுத்த வேண்டும் என்றாராம். இதே போன்றே, விமர்சனம் பாஜகவிலும் அலசப்பட்டுள்ளது. குறிப்பாக, நிதிஷின் பேச்சை கண்டித்து ஸ்டாலின் வெளிநடப்பு செய்திருந்தால் இந்தியா கூட்டணியில் ஸ்டாலினின் இருப்பே வேறு லெவலில் இருந்திருக்கும் என கமெண்ட் பண்ணினாராம்
கூட்டணி பின்னணி: நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 28 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.
லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணியின் 3-வது கூட்டம் இன்று மற்றும் நாளை மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்து 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications